கணிதப் பாடத்தில் சித்தியடையாதமையால் தற்கொலை செய்துகொண்ட மாணவி!!

688

Sucide

புஸ்ஸல்லாவ பிளக்போரஸ்ட் கிராமத்தை வசிபிடமாகக் கொண்ட 17 வயதுடைய செல்வி லிதுர்ஸ்சனா மகேஸ்வரன் என்ற மாணவி பரீட்சை பெறுப்பேற்றை காரணமாகக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தற்கொலை தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. மேற்படி மாணவி புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லாரியில் தரம் 12 இல் கலைப்பிரிவில் கல்விபயின்று வருகின்றார். 2013ம் ஆண்டு கல்வி பொது சாதாரண தர பரீட்சை எழுதிய இவர் கணித பாடத்தில் சித்தியடையவில்லை. தொடர்ந்து 2014ம் ஆண்டு கணித பாடத்தை இரண்டாம் தடவை எடுத்து தருவதாக கூறி கல்வி பொது உயர்தர பயின்று வந்துள்ளார்.

அதன் படி 2014ம் ஆண்டு கணித பாடத்தை பரீட்சை எழுதிய இவர் தற்போது வந்துள்ள பெறுபேற்றினை கையடக்க தொலைபேசியில் பார்த்து விரக்த்தி அடைந்த நிலையிலேயே இந்த தற்கொலை நேர்ந்துள்ளது.

அதேவேளை பெறுபேறு வந்த போது பெற்றோர் உட்பட உறவினர்கள் சில ஆசிரியர்கள் அவரை கண்டித்துள்ளதாகவும். பாடசாலையில் உயர்தரத்திற்கு இனைத்துக் கொள்ளும் போது கணித பாடத்தை 2014 ஆம் ஆண்டு பெற்று தரா விட்டால் உயர்தரத்தை தொடர முடியாது என்ற வகையில் கடிதம் ஒன்றை பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இது தொடர்பாக பாடசாலையின் அதிபரை தொடர்பு கொண்ட போது நாங்கள் அவ்வாறான கடிதம் ஒன்றை பெறவில்லலைபுதிய சுற்றிக்கையின் படி கணித பாடம் இல்லாமல் உயர்தர பரீட்சைக்கு தோற்ற முடியும் அதனை நாங்கள் மாணவர்களுக்கு அறிவித்தும் உள்ளோம்.

குறித்த மாணவி நல்ல பழக்கவழக்கம் உள்ள நன்கு கல்வி கற்க கூடியவர். நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதலாம் தவனை பரீட்சைக்கு வெள்ளிக்கிழமை (2015.03.27) வரை சமூகம் தந்துள்ளார். இருந்தும் இந்த துரதிஷ்ட்டமான நிகழ்வு குறித்த தனது பாடசாலை கவலையடைவதாகவும் தெரிவித்தார்.

சம்பவ தினத்தன்று வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அப்பா பாடசாலையின் அதிபர் அம்மா ஆசிரியர் இவர்கள் இருவரும் பாடசாலை சென்று விட்டனர். இரு சகோதரிகள் ஒரு சகோதரன் இவர்களும் பாடசாலைக்கு சென்றுள்ளனர். இதன் போது தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

எப்போதும் தனிமையை விரும்பும் இவர் தற்கொலைக்கு முன் தன்னுடைய கடந்தகால புகைப்படங்களை பார்த்துள்ளார். கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்துள்ளார். அதில் தானே தற்கொலை காரணம் எனவும் தனக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு பிடிக்கவில்லை என்று எமுதியுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன் குறித்த மாணவியின் பெற்றோர் தனது பிள்ளைகளை விருப்பத்திற்கு ஏற்ப வளர்த்தாகவும் இவ்வாறான நிலையில் அப்பா, அம்மா இருவரினதும் கனவை தனக்கு நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையிலும் நண்பர்கள் மத்தியில் தனக்கு தாழ்வு மனப்பான்மை தோன்றியதாலும் இந் நிலை தோன்றியுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.

சம்பவம் நிகழ்ந்து குறிப்பிட்ட நேரத்தில் சகோதரன் (தரம் 03) பாடசாலை விட்டு வீடு திரும்பி வீட்டு கதவை தட்டியுள்ளார். கதவு திறப்படவில்லை. பின் ஜன்னல் வழியாக பார்த்த போது அக்கா தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.

பின் அயலவர்களிடம் கூறிவிட்டு பக்கத்தில் இருந்த அம்மா கல்வி கற்பிக்கும் பாடசாலைக்குச் சென்று அம்மாவை அழைத்து வந்து அயலவர்களின் உதவியுடன் புஸ்ஸல்லாவ வகுகப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இருந்தும் உயிர் பிரிந்தே இந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின் பொலிஸ் விசாரணை மரண விசாரனைகள் மூலம் தற்கொலை என முடிவு செய்யப்பட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட்டு நாளை தகன கிரிகைகளுக்கான நடவடிக்கைகள் மேற்க் கொள்ளபட்டுள்ளன.

இந்த நிலமை குறித்து புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெயரத் தொடர்பு கொண்ட போது, புஸ்ஸல்லாவ பிரதேசத்தை பொறுத்தவரையில் பாடசாலை மாணவர்களின் தற்கொலை முயற்சி அதிகரித்து வருகின்றதுஇதனை தடை செய்ய பல நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டும் பாடசாலைகள்தோரும் கூட்டங்களும் நடாத்தப்பட்டும் வருகின்றன.

மாணவர்களுக்கு பாடங்களை தவிர விளையாட்டு, கலை, கலாச்சார விடயங்களில் ஈடுப்பட வாய்ப்பளிக்க வேண்டும். அத்துடன் மாணவர்களின் தன் நம்பிக்கையை வளர்க்க வேலைத்திட்டங்களை பாடசாலைகள் தோரும் அதிபர்கள் நடவடிக்கை எடுத்து ஆசிரியர்கள் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையிலேயே இவ்வாறான பிரைச்சினைகளுக்கு தீர்வு காணலாம். என்று கூறினார்.

குறிப்பிட்ட காலப்பகுதியில் இரட்டைப்பாதை அட்டபாகை தோட்டம், வகுகப்பிட்டிய சவுக்குமலை தோட்டம், புசல்லாவ பிளக்போரஸ்ட் தோட்டம், புசல்லாவ நகரம், புசல்லாவ ரொத்சைல்ட் தோட்டம், உட்பட தற்போது புசல்லாவ பிளக்போரஸ்ட் கிராம மாணவி தற்கொலை அடங்களாக மொத்தமாக 6 யுவதிகள் தற்கொலை செய்து கொண்டதுடன் புசல்லாவ ரொத்சைல்ட் தோட்ட மாணவன் ஒருவனும் புசல்லாவ நகர வர்தகர் அடங்களாக சுமார் 8 தற்கொலைகள் புசல்லாவவையில் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு தற்கொலைகள் அதிகரித்து வரும் புசல்லாவ பிரதேசத்தில் இதனை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது கட்டாயமானதாகும்.