சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை!!

708

ICC

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசாங்கம் தலையீடு செய்தால் உறுப்புரிமையை இலங்கை இழக்க நேரிடும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை எச்சரித்துள்ளது.

கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையை அமைத்ததன் ஊடாக ஏதேனும் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றிருந்தமை நிரூபிக்கப்பட்டால் இலங்கை சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்புரிமையை இழக்கும் என அறிவித்துள்ளது.

இவ்வாறு உறுப்புரிமை தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டால, உலகக் கிண்ணப் போட்டித் தொடர் போன்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டிகளில் இலங்கை பங்கேற்க முடியாது.

கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசியல் தலையீடு செய்யப்பட்டால் அது பேரவையின் 2.9 பி சரத்திற்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து நம்பகமான பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதில் எவ்வித தவறும் கிடையாது என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க அண்மையில் இடைக்கால கிரிக்கெட் சபையொன்றை நிறுவி அதன் பொறுப்புக்களை முன்னாள் வீரர் சிதத் வெத்தமுனியிடம் ஒப்படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.