வவுனியாவில் உருவாகிய “பொண்ணுங்களே இப்படித்தான்”குறும்படம் வெளியீடு!(படங்கள் வீடியோ)

514

வவுனியாவில் எழில் வேந்தன் இயக்கத்தில் உருவாகிய “பொண்ணுங்களே இப்படித்தான்” என்னும் குறும்படம் 19.04.2015 ஞாயிற்றுக் கிழமையன்று வவுனியா வசந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது.

மேற்படி குறும்படத்தை e7 films மற்றும் Standard HD video ஆகியன இணைந்து தயாரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது .மேற்படி குறும்படத்துக்கான

ஒளிப்பதிவு  : மில்ரன் ரவி மற்றும் ரஜீவன்ஆகியோரும்

எடிட்டிங் :ஜசிதரன்   இசை :சமில்  பாடல்வரிகள் :எழில் குமரன், கவியகிலன்

பாடகர்கள் : சமில், சுகந்தி ,கேதீஸ்வரன்

இயக்கம் :எழில்வேந்தன்

மேற்படி குறும்படமானது தென்னிந்திய தயாரிப்புக்களுக்கு  எவ்விதத்திலும் சளைத்தது இல்லையென மேற்படி குறும்படத்தின் வெளியீட்டில் கலந்து கொண்ட பொதுமக்கள் கருத்துக்கள் தெரிவித்திருந்தனர் .

இக்குறும்படத்தின் மறு  காட்சிகள் வவுனியா வசந்தி திரையரங்கில் வரும் 25.04.2015 சனிக்கிழமை 26.04.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு காண்பிக்க ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது .

11174734_10203127808956385_8729905631107125842_o 11146190_10203111924719289_172182274353713068_n 11075719_1620772454804142_278063010410568042_n 10702154_1620719434809444_2666652494814032594_n