நுவரெலியாவில் ஆலங்கட்டி மழை!!(படங்கள்)

320

மலையகப் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன், சீரற்ற காலநிலையே காணப்படுகன்றது. அதிக மழை பெய்ததன் காரணமாக வாகனங்களை செலுத்துவதற்கு மிகவும் சிரமமாக காணப்படுகின்றது.

இதனால் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, ஹற்றன், கினிகத்தேன போன்ற பிரதேசங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹற்றன் கொழும்பு பிரதான வீதியில் மற்றும் ஹற்றன் நுவரெலியா வீதியில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றமையால் குறித்த வீதியில் பயணம் செய்யும் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால் வாகன சாரதிகள் வாகனங்களின் முன் விளக்கை ஒளிரவிட்டு, வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, நுவரெலியாவில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் ஆலங்கட்டி மழை பெய்தது. நகர மத்தியிலே சுமார் 5 நிமிடங்கள் ஆலங்கட்டி மழை பெய்தது.

1 2 3 4 5 6