உலகில் மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் இலங்கை முன்னேற்றம்!!

332

Happy

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் தர வரிசையில் இலங்கை 5 இடங்கள் முன்னேறியுள்ளது.

158 நாடுகளை உள்ளடக்கி ஐக்கிய நாடுகள் நிரந்திர அபிவிருத்தி தீர்வு வலையமைப்பு இந்த தரப்படுத்தலை தயாரித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு தர வரிசையில் 137 வது இடத்தில் இருந்த இலங்கை 2015இல் 132ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தனிநபர் வருமானம், ஆயுள்காலம், சுகாதாரம், நாடுகளின் ஊழல் மோசடிகள், சமூக சுதந்திரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த தரப்படுத்துதல் மேற்கொள்ளப்படுகிறது.

சுவிஸர்லாந்து இந்த தரப்படுத்தலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை ஐஸ்லாந்தும் மூன்றாம் இடத்தை டென்மார்கும் நான்காம் இடத்தை நோர்வேயும் 5 ஆம் இடத்தை கனடாவும் பிடித்துள்ளன.

இலங்கையின் அயல் நாடான இந்தியா 117 வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 15வது இடத்திலும் பிரித்தானியா 21 வது இடத்திலும் உள்ளன.

மகிழ்ச்சி குறைந்த நாடுகள் வரிசையில் டோகோ, புருண்டி,சிரியா, பேனின், ருவாண்டா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.