பப்புவா நியூ கினியா தீவில் நில நடுக்கம்!!

299

Earthquake-logo

பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியாவில் கோகோபோ நகரில் இருந்து தெற்கு – தென் மேற்கு பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கத்தையொட்டி பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இதே பகுதியை நேற்று 6.7 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அந்தமான், நிக்கோபர் தீவுகளில் இன்று பிறபகல் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 5.1 அளவில் பதிவாகியுள்ள இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.