கொரியாவில் வேலைவாய்ப்பு தொடர்பில் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை!!

293


SLBF

கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்யும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்க தனிநபர் எவருக்கும் முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் ஒருவரின் அமைப்பாளரென தன்னை கூறிக் கொண்டு கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதி அளித்து பெண்களிடம் 83,000 ரூபா நிதி மோசடி செய்த ஒருவரை நேற்று கோட்டை பொலிஸார் கைது செய்தனர்.



இவ்வாறான நபர்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் அப்படி யாராவது இருப்பின் தகவல் தருமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.