பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புதிய வசதி!!

313


FB

பிரபல நிறுவனங்களின் செய்தி கட்டுரைகளை செய்தி ஊட்டம்( நியூஸ் ஃபீட்) பகுதியில் நேரடியாக வெளியிட வகை செய்யும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக்.



தற்போது ஸ்மார்ட் போன்களில் செய்தி கட்டுரைகள் லோட் ஆவதற்கு குறைந்தபட்சம் 8 வினாடிகள் ஆகிறது. இதனால் ஏற்படும் சிரமத்தை குறைக்கும் பொருட்டு விரைவு செய்தி கட்டுரைகள் என்ற பெயரில் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இதன்படி நியூயோர்க் டைம்ஸ், என்பிசி, அட்லாண்டிக், தி கார்டியன், பிபிசி நியூஸ் போன்ற பிரபல செய்தி நிறுவனங்களின் செய்தி கட்டுரைகள் நேரடியாக பேஸ்புக் செய்தி ஊட்டம் பகுதியில் வெளியிடப்படும்.



இதற்காக 9 முக்கிய செய்தி நிறுவனங்களுடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊடக சுதந்திரம் அதிகரிப்பதுடன், விரைவாகவும், எளிதாகவும் பேஸ்புக் பயனாளர்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்க முடியும் என கூறுகிறது பேஸ்புக் நிர்வாகம்.