வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலய மாணவர்கள் வித்தியாவின் படுகொலைகெதிராக ஆர்ப்பாட்டம்!!( படங்கள், வீடியோ)

519

கடந்தவாரம்கூட்டு  பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன்  படுகொலையைக் கண்டித்து வவுனியா  சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05.2015) காலை 10.00 மணியளவில் பாடசாலைக்கு அருகில் வீதியின் இருபுறமும் அணிவகுத்து   நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில்   ஈடுபட்டனர்.

பாடசாலை அதிபர்  ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்  என நூற்றுக்கணக்கானவர்களுடன்  வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம்  மற்றும்   வடமாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன்  மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். போராட்த்தின் இறுதியில்  மாணவர்களது கோரிக்கைகளை அடங்கிய மகஜர் பாடசாலை அதிபர்  வடமாகாண சுகாதார அமைச்சரிடம் கையளித்தார் .

மேற்படி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட  மாணவர்கள்

மாணவிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுங்கள்!

சட்டதரனியே  சதி செய்யாதே!

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கு!

மலரை கசக்கிய மந்திகளை மன்னிக்காதே!

லஞ்சத்தால் நீதியை விலைக்கு வாங்காதே!

என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர் .

மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் :ஸ்ரீ நாகராஜா வித்தியாலயம் 

 

 

0ddbf35534e35c5cd546aa06843c2251e63b4a7462eaf2a38e9d78e8e8deb74b 2a7f30a1b79d2ebaf3d062f9d1cc511cc14298bd8d82f56d4c8a3f5e52f9470e 8c46d4dc37160297e790c657111d5edea9014a83d58a2fb742098f9de2bcb896 32260f1034d75c62e83c1a21bd9ca62795de415eddaa8b142f4e020594c32298 aa5191be8c3a2ac97ab7787b057b12fd0e7ce6075bdb66801856dd2095f459ef ce1e5b92167074765c969f5b284c8d6e8a6c989d3973d3fbd8956685416cea8b cff0a0ce73f01c1993c02dbb2d68561b98883976ae3e03f22e1135afc04ad519 d8c53380a757915d5a8c6efedeabcfc583ffeaac6cec29e74b803cb0f1d155d7 e1432720412d7e04156f3b4131d7a83952196f27a6b1af5d74451467961db610 f3c7c487decdcd72e0811551af2aff5682af3aa41899f6d0163aa33d80dd9852