சென்னை வீரருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த இளம் பெண் : வெளியான பல ரகசியங்கள்!!

246

IPL

ஐபிஎல் தொடரில் நடந்த முறைகேடுகள் பற்றி பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்பு பிரிவு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த முறைகேடுகள் போலவே 2014ம் ஆண்டும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், சென்னை வீரர்கள் இளம் பெண்ணுடன் தங்கியிருந்தது பற்றியும் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு முறைகேடுகள் பற்றி பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்பு பாதுகாப்பு பிரிவு, ரவி சாஸ்திரி மற்றும் பல அணி நிர்வாகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது. அந்த மின்னஞ்சலில் இடம்பெற்றுள்ள விதிமீறல்கள்:-

2014, ஏப்ரல் 30ல், பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, தனது அணி வீரர்களுக்காக மும்பை கடல்பகுதியில் படகு ஒன்றில் பார்ட்டி கொடுத்தார். வெளியாட்கள் யாருமே பங்கேற்காத அந்த பார்ட்டியில் ஒரு பெண் மட்டும் வெளியில் இருந்து பங்கேற்றுள்ளார்.

2014 மே 8ல், ஷாரூக்கானின் வர்த்தக பார்ட்னர் ஒருவர் கொல்கத்தா அணிக்கு கொடுத்த பார்ட்டியில் பல நண்பர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் இதற்கான அனுமதி ஐபிஎல் அமைப்பிடம் பெறப்படவில்லை.

2014 மே 8ல், மும்பை ஹோட்டலில், தங்கியிருந்த சிஎஸ்கே வீரர் ஒருவரை, இரவு 9.50 மணிக்கு சம்மந்தம் இல்லாத இளம் பெண் ஒருவர் சந்தித்துள்ளார். இரவு அறைக்குள் நுழைந்த அந்த பெண், மறுநாள் காலை 6 மணி 5 நிமிடங்களில் தான் வெளியேறியுள்ளார். இதுகுறித்து அந்த வீரரிடம் விசாரித்த போது, அந்த பெண் தனது தோழி என்று தெரிவித்தார்.

2014 மே 9ல், மற்றொரு சென்னை வீரர் தங்கியிருந்த அறைக்குள், மற்றொரு இளம் பெண் சென்றார். இரவு 10 மணி 10 நிமிடங்களுக்கு அறைக்குள் சென்ற அந்த பெண், மறுநாள் காலை 7 மணி 30 நிமிடங்களுக்குதான் வெளியே வந்தார்.

இதுகுறித்து அந்த வீரரிடம் விசாரித்தபோது, அந்த பெண் தனக்கு மிகவும் நெருக்கம் என்றும், அவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

ஆனால், விசாரித்தபோது, அந்த பெண் ஏற்கனவே ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வேறு சில மூத்த வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்றும், அடிக்கடி போட்டி நடக்கும் இடங்களில் அவரை பார்க்கலாம் என்பதும் தெரியவந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.