வவுனியா மாணவர்கள் 7 பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை!!

531

vavuniya

கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்­கிலும் திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்கிலும் நடை­பெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்­லுநர் போட்­டி­களின் முதல் இரண்டு தினங்­களில் சாத­னைகள் பல நிலைநாட்டப்பட்­டுள்­ளன.

திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் 18 வயதுக்குட்ட பெண்­க­ளுக்­கான 5000 மீற்றர் வேக­நடைப் போட்­டியை 28 நிமிடங்கள் 31.03 செக்­கன்­களில் நிறைவு செய்த வவு­னியா மாவட்ட மெய்வல்லுநர் சங்­கத்தைச் சேர்ந்த கே.கன­கேஸ்­வரி புதிய சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்­கத்தை சூடினார்.

மேலும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர். அவர்களின் விபரம் வருமாறு..

ஆர்.ரமா (20இன் கீழ் பெண்கள் 1000 மீ. வேக நடை 1நி. 09.27.28 செக்)
ஆர்.தர்ஷிகா (23இன் கீழ் பெண்கள் சம்­மட்டி எறிதல் 23.17 மீற்றர்)
சி.ஜேனோசன் (20இன் கீழ் ஆண்கள் சம்­மட்டி எறிதல் 29.19 மீற்றர்)
ஆகியோர் வெள்ளிப்பதக்கங்­களை வென்­றனர்.

மேலும்..

ஐ.மேரி கொன்­சலா (16இன் கீழ் பெண்கள் 3000 மீ. வேக­நடை 19 நி. 05.03 செக்.)
பீ.தர்­ஷிகா (18இன் கீழ் பெண்கள் 5000 மீ. வேக­நடை 35 நி. 52.89 செக்.)
கே.கோகி­ல­வாணி (23இன் கீழ் 10000 மீ. 1 நி. 00.38.96 செக்.)
ஆகியோர் வெள்ளிப் பதக்­கங்­க­ளையும் வென்றனர்.

கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற 20 வய­துக்­குட்­பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்­தலில் வலல்ல ஏ. ரட்­நா­யக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹர்­ஷனி மற்றும் தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்லூ­ரியைச் சேர்ந்த ஜெ. அனிதா ஆகிய இரு­வரும் 3.10 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினர்.

எனினும் ஒரே தாவலில் 3.10 மீற்றர் உய­ரத்தைத் தாவிய ஹர்­ஷனி தங்கப் பதக்­கத்தை வென்றெடுத்­த­துடன் அந்த சாதனை அவ­ருக்கு சொந்­த­மா­னது. இரண்­டா­வது முயற்­சியில் அனிதா இந்த உய­ரத்தைத் தாவி­யதால் வெள்ளிப் பதக்­கத்தை வென்­றெ­டுக்க நேரிட்­டது.

இதே­வேளை 18 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­த­லிலும் அள­வெட்டி அருணோ­தயா கல்­லூ­ரியின் நெப்­தலி ஜொய்சன், தெல்­லிப்­பழை மகா­ஜ­னாவின் எஸ். டிலக்சன் ஆகிய இரு­வரும் 4.20 மீற்றர் உயரம் தாவி புதிய சாத­னையை நிலைநாட்டினர்.

எனினும் குறைந்த முயற்சி அப்­ப­டையில் நெப்­தலி ஜொய்­ச­னுக்கு தங்கப் பதக்கம் கிடைத்­தது.
இதே போட்­டியில் மகா­ஜனா வீரர் எஸ். தினேஷ் (3.70 மீற்றர்) வெண்­கலப் பதக்­கத்தை வென்றார்.

பெண்­க­ளுக்­கான 18 வய­துக்­குட்­பட்ட கோலூன்றிப் பாய்­தலில் 2.70 மீற்றர் உயரம் தாவிய தெல்லிப்பளை மகா­ஜனா வீராங்­கனை டிலானி ஸ்ரீஸ்கந்தராஜா தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார்.

கதிர்­காமம் துட்­டு­கெ­முனு வித்­தி­யா­ல­யத்தைச் சேர்ந்த எம். சி. தமயந்தியினால் 2011இல் நிலைநாட்­டப்­பட்ட 29 நிமி­டங்கள் 55.88 செக்­கன்கள் என்ற சாத­னை­யையே கன­கேஸ்­வரி முறியடித்­துள்ளார்.

ஆண்­க­ளுக்­கான 10000 மீற்றர் வேக நடைப் போட்­டியை 58 நிமி­டங்கள் 57.68 செக்­கன்­களில் நிறைவு செய்த இதே மாவட்­டத்தைச் சேர்ந்த கே. ரசி­ஹரன் தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். இதன் பிர­காரம் முதல் இரண்டு தினங்­களில் மொத்தம் பத்து சாத­னைகள் நிலை­நாட்­டப்­பட்­டுள்­ளன.

திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற 20 வயதுக்­குட்­பட்ட பெண்களுக்­கான முப்­பாய்ச்­சலில் நீர்­கொ­ழும்பு நியூஸ்டெட் மகளிர் கல்­லூ­ரியைச் சேர்ந்த விதூஷா லக்­மாலி 13.12 மீற்றர் தூரம் பாய்ந்து தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார்.

அத்துடன் 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முப்பாய்ச்சலிலும் விமானப்படையைச் சேர்ந்த எஸ். துலாஞ்சலி 12.76 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.