டெடி பியர்(Teddy Bear) பொம்மைக்கு காப்புரிமை பெறும் கூகுள்!!

572

Teddy

குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க உதவும் விளையாட்டுப் பொம்மைகளை தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் உருவாக்கியுள்ளது. இதற்கான காப்புரிமைக்கு அந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

கூகுளின் இந்த புதிய கண்டுபிடிப்பில், குழந்தைகள் பயன்படுத்தும் கரடி, முயல் பொம்மைகள் போல, பல்வேறு வடிவங்களில் உள்ள விளையாட்டு பொம்மைகளின் உள்ளே அதிநவீன கமராக்கள், மைக்ரோ போன்கள், டிரான்ஸ்மிட்டர்கள் பொருத்தப்பட்டு, அவற்றின் மூலம் திரட்டும் தகவல்கள் வை-பை மற்றும் ப்ளூடூத் மற்றும் ´க்ளவுட் கம்ப்யூட்டிங்´ மூலமாக வாடிக்கையாளர்களுடன் இணைக்கப்படும்.

இதன் மூலம், அந்த பொம்மை உள்ள இடத்தை அதன் உரிமையாளர் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்க முடியும். இணையதளத்திலிருந்து கிடைக்கும் எச்சரிக்கைகளை வைத்து, செல்போன் மற்றும் ரிமோட் கன்ட்ரோல் சாதனங்கள் மூலமாக அந்த பொம்மைக்கு கட்டளைகள் இடவும் முடியும்.

அவ்வாறு இடப்படும் கட்டளைகளால் பொம்மையை அசையச் செய்து செயலாற்ற வைக்கவும், அதில் பொருத்தியுள்ள மைக்ரோபோன் மூலம் கட்டளையிடுபவரின் குரலை ஒலிக்கச் செய்து, பேசுவது போலச் செய்யவும் முடியும். இது போன்ற பொம்மைகள் மூலம், தொலைவிலிருந்து பல வீட்டுப் பொருள்களை இயக்கவும், குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும் பயன்படுத்தலாம் என கூகுள் தனது காப்புரிமை விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.