வவுனியா கள்ளிக்குளம் கிராமத்துக்கு வரலாற்றில் முதற்தடவையாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் போக்கவரத்துச் சேவை!!(படங்கள்)

332

நூற்றாண்டைத்தாண்டிய வவுனியா மாவட்ட கள்ளிக்குளம் கிராமத்துக்கு முதல்தடவையாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் அமைச்சரும் அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ றிசாட் பதியுதீன் தலைமையில் இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த பேருந்துச் சேவை 22.05.2015 வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் வவுனியா கருங்காலிக்குளம், கள்ளிக்குளம் பாடசாலைக்கும் அன்றைய தினம் புதிய மின்சார இணைப்பும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியரும், இலங்கை தர நிர்ணயக் கட்டளைச் சபையின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் அமைச்சருடைய சிரேஸ்ட ஆலோசகருமான கலாநிதி M.S .அனீஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்வினை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருடைய வன்னி மாவட்டத்துக்கான கிறிஸ்தவ மத விவகார ஒருங்கிணைப்பாளரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய கலாநிதி S.சந்திரகுமார் அவர்களின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் இ.போ.சபையின் வவுனியா முகாமையாளரும் மற்றும் இ.மி.சபையின் வவுனியா மாவட்ட இயக்குனரும் கள்ளிக்குள கிராம உத்தியோகத்தர் திரு.J. அமலதாஸ் அவர்களும் கள்ளிக்குள பாடசாலை அதிபர் மற்றும் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

1 2 3 4