எதிர்­வரும் நூறு ஆண்­டு­களில் மனி­தர்­களை ரோபோக்கள் கட்­டுப்­ப­டுத்தும் அபாயம்!!

373


robo

எதிர்­வரும் நூறு ஆண்­டு­க­ளுக்குள் மனி­தர்­களை ரோபோக்கள் கட்­டுப்­ப­டுத்தும் நிலை ஏற்­படும் வாய்ப்­புள்­ள­தாக உலகப் புகழ்­பெற்ற பிரித்­தா­னிய பௌதி­க­வி­ய­லா­ள­ரான ஸ்டீவன் ஹவ்கிங் எச்சரித்­துள்ளார்.



லண்­டனில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற நவீன மதி­நுட்பம் தொடர்­பான மாநா­டொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு எச்­ச­ரித்­துள்ளார். செயற்கை மதிநுட்பமா­னது மனி­தர்­களின் முடி­வுக்கு வழி­வகை செய்யக் கூடும் என அவர் தெரி­வித்தார்.

செயற்கை மதி­நுட்­பத்­துடன் கூடிய ரோபோக்­களின் உரு­வாக்­க­மா­னது அந்த செயற்கை மதிநுட்பத்தை யார் கட்­டுப்­ப­டுத்­து­வது என்­பதை விடவும் அந்த மதி­நுட்பம் அனைத்­தையும் கட்டுப்ப­டுத்தும் நிலையை ஏற்­ப­டுத்த வழி­வகை செய்­வ­தாக அமையும் என அவர் கூறினார்.



அந்த வகையில் எதிர்­வரும் நூறு ஆண்­டுகளுக்குள் செயற்கை மதி­நுட்பம் மனி­தர்­களை விஞ்சி அவர்­களை கட்­டுப்­ப­டுத்தும் ஆற்­றலைப் பெற்று விடும் என அவர் தெரி­வித்தார்.
அவ்­வா­றான நிலை ஏற்­ப­டு­கையில் செயற்கை மதி­நுட்ப கணி­னிகள் எமது இலக்­கு­க­ளை­யொத்த இலக்­கு­களைக் கொண்­டி­ருப்­பதை உறுதி செய்ய வேண்­டிய தேவை எமக்கு ஏற்­படும் என அவர் கூறினார்.



மேற்­படி செயற்கை மதி­நுட்பம் குறித்து உரிய பாதுகாப்பை மேற்கொள்ளாவிட்டால் அது மனிதர்களை இருண்ட எதிர்காலமொன்றிற்கு இட்டுச் செல்வதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.