விலையுயர்ந்த தங்கக் கடிகாரங்களை நாய்க்கு பரிசளித்த செல்வந்தர்!!

307

don

சீனாவில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபராக இருப்பவர் வாங்ஜியன்லின். இவர் சீனாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராவார். இவரது ஒரே மகன் வான்சிகாங் (வயது 27).

இவர் தனது வீட்டில் உயர்ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாயின் 2 முன்கால்களிலும் விலை உயர்ந்த தங்கக் கடிகாரத்தை அணிவித்துள்ளார்.

இந்த கடிகாரம் அப்பிள் நிறுவனம் தயாரித்துள்ள விலை உயர்ந்த டிஜிட்டல் வசதி கொண்டதாகும்.

நாய்க்கு விலை உயர்ந்த கடிகாரம் அணிவித்திருப்பது பற்றி வான்சிகாங் கூறும்போது, இது எனது செல்ல நாய் இதற்காக எவ்வளவு செலவு செய்யவும் நான் தயாராக இருக்கிறேன்.

தற்போது 2 கடிகாரம் மட்டுமே வாங்கியதால் அதை 2 கால்களில் அணிவித்திருக்கிறேன். விரைவில் மேலும் 2 கடிகாரம் வாங்கி மற்ற 2 கால்களிலும் அணிவிக்கப்போகிறேன் என்று கூறினார்.