அவுஸ்திரேலியாவில் கணவரைக் கொலை செய்த குற்றத்தை எதிர்நோக்கும் இலங்கை மருத்துவர்!!

260


Aus

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த பெண் மருத்துவர் தனது கணவரை கொலை செய்த குற்றம் தொடர்பான வழக்கொன்றை எதிர்நோக்கியுள்ளார்.



மேற்கு அவுஸ்திரேலியாவின் மத்திய மேற்கு மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

34 வயதான சமரி ரசிகா தெனுவத்த குணதிலக்க லியனகே என்ற இந்த பெண் மருத்துவர் தனது கணவரான தினேந்திர அத்துகோரளவை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் அவர் தான் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.



தினேந்திர ஜெரால்டன் மருத்துவப் பீடத்தின் மருத்துவராக பணியாற்றி வந்தார். இலங்கையில் இருந்து 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு சென்ற தினேந்திர அத்துகோரள அவரது வீட்டில் இறந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மேற்கு அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் ஸ்ரீனோ சிறையில் இருந்து காணொளி மூலம் நேற்று ஆஜரான பெண் மருத்துவர் தான் குற்றமற்றவர் என கூறினார்.


வழக்கிற்கு மனநல மருத்துவ நிபுணர்களை அழைக்க உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. அதுவரை சமரி ரசிகா தெனுவத்த குணதிலக்க லியனகேவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.