வவுனியாவில் 13 வருடங்களுக்கு முன் தொடரப்பட்ட வழக்கிற்கு இன்று மன்னாரில் தீர்ப்பு!

334

download

வவுனியாவிலிருந்து 2002/07/23 அன்று மடு நோக்கி வாடகைக்கு அமர்த்தி சென்ற பேருந்தினை கடத்தும் நோக்கில் இருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் 14 சந்தேக நபர்களுக்கெதிரான வழக்கு விசாரணை 13 வருடங்களின் பின் இன்று 28.05.2015வியாழக்கிழமை முடிவுக்கு வந்து சந்தேக நபர்களுக்கெதிரான குற்றங்கள் எண்பிக்கப்படாத நிலையில் இன்று மன்னார் மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கௌரவ மக்கீம் முகமட் அவர்களால் விடுதலை செய்யப்பட்டனர் .

மேற்படி வழக்கில் 14 சந்தேக நபர்களுக்கெதிரான குற்றப்பத்திரிகை கௌரவ சட்டமா அதிபரினால் வவுனியா நீதி மன்றில் 29.01.2007 இல் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை (வழக்கு எண்:HCV/1957/07)இடம்பெற்றது .

பின்னர் அது மன்னார் மாவட்டத்தில் மேல்நீதிமன்றம் ஆரம்பிக்கபட்டதன் பேரில் மன்னர் மேல்நீதி மன்றுக்கு மாற்றப்பட்டு (வழக்கு எண் :HC/ML/49/12)அங்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது .

மேற்படி வழக்கு நீதவான் நீதிமன்றில் நிலுவையில் இருந்து விசாரணை செய்யப்பட்ட போது சிரேஸ்ட சட்டத்தரணி அன்டன் புனித நாயகத்தின் கனிஸ்ட சட்டதரணியான T.J.பிரபாகரன் ஆஜராகியிருந்தார்.அவருடன் கனிஸ்ட சட்டதரணிகளான யூட்சன், அலெக்ஸ் ராஜா, இளங்குமரன், ரொஜிஸ் ரெஜி மற்றும் யூஜீன் ஆனந்தராஜா ஆகியோரும் ஆயராகினர் .

மேற்படி வழக்கு மேல்நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டபோது சிரேஸ்ட சட்டத்தரணி அன்டன் புனித நாயகத்துடன் கனிஸ்ட சட்டதரணிகளான திருஅருள், இளங்குமரன், அக்மல், அலஸ்டீன் ஆகியோரும் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.