திணறும் நியூசிலாந்து அணி : புதிய சாதனை படைத்த அண்டர்சன்!!

253

Andersan

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜேம்ஸ் அண்டர்சன் படைத்துள்ளார்.

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து முதலில் களமிறங்கியது.

இதில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரார் மார்ட்டின் குப்டில் (0), வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சனின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இது அவருக்கு 400வது டெஸ்ட் விக்கெட் ஆகும்.

இதன் மூலம் உலக அரங்கில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிவர்களின் வரிசையில் அவர் 12வது வீரராக இணைந்தார்.

தடுமாற்றத்துடன் இன்னிங்சை ஆரம்பித்த நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 297 ஓட்டங்களை குவித்துள்ளது.

அதிகபட்சமாக டாம் லதாம் 84 ஓட்டங்களும், லூக் ரொஞ்சி 88 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில், ஸ்டூவர்ட் பிராட் 3, ஆண்டர்சன், மார்க் வுட் தலா 2, பென் ஸ்டோக்ஸ் 1 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.