டெஸ்ட் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் சங்கக்கார, மத்யூஸ், ஹேரத்!!

243

Sanga

சர்வதேச கிரிக்கெட் சபை டெஸ்ட் போட்டிகள் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன் படி துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில்..

இலங்கை அணியின் சங்கக்காரா 909 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா 2வது, 3வது இடங்களில் உள்ளனர்.

சுமித் (அவுஸ்திரேலியா), மத்யூஸ் (இலங்கை), யூனுஸ்கான் (பாகிஸ்தான்), ஜோரூட் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), வார்னர் (அவுஸ்திரேலியா), விராட் கோலி ஆகியோர் முறையே 4 முதல் 10 இடங்களில் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில்..

ஸ்டெய்ன் (தென் ஆபிரிக்கா), அண்டர்சன் (இங்கிலாந்து), ஹரீஸ் (அவுஸ்திரேலியா) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

போல்ட் (நியூசிலாந்து), ஜோன்சன் (அவுஸ்திரேலியா), ஹேரத் (இலங்கை), பிராட் (இங்கிலாந்து), பில்லாண்டர் (தென் ஆபிரிக்கா), மொர்கல் (தென் ஆபிரிக்கா), சவுத்தி (நியூசிலாந்து) ஆகியவர்கள் முறையே 4 முதல் 10 இடங்களில் உள்ளனர்.

நாடுகள் வரிசையில்..

தென் ஆபிரிக்கா 130 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்திலும், அவுஸ்திரேலியா 108 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன. இந்தியா 99 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் இருக்கிறது.

நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகள் முறையே 4 முதல் 8வது இடங்களில் உள்ளன. வங்கதேசம் 9வது இடத்திலும், சிம்பாப்வே 10 இடத்திலும் இருக்கிறது.