தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ளும் விமான இறக்கைத் தொழில்நுட்பம்!!

432

flight

நடு­வானில் பறக்கும் போது தன்­னைத்­தானே சீரமைத்துக் கொள்ளக் கூடிய விமான இறக்கை தொழில்­நுட்­பத்தை பிரித்­தா­னிய விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

மேற்­படி இறக்கை தொழில்­நுட்­பத்தின் கண்­டு­பி­டிப்பு குறித்து லண்­டனில் இடம்­பெற்ற ரோயல் சபைக் கூட்­டத்தில் பிரிஸ்டல் பல்­க­லைக்­க­ழக விஞ்­ஞா­னிகள் குழுவால் முன்­வைக்­கப்­பட்­டது.

நடு­வானில் பற­வைகள் விமா­னங்­களில் மோது­வதால், அவற்றின் (விமா­னங்­களின்) இறக்­கைகள் சேத­ம­டைந்து அவை விபத்­துக்­குள்­ளா­வது வழ­மை­யா­க­வுள்­ளது.

இந்­நி­லையில் விஞ்­ஞா­னி­களால் மூன்று வருட கால ஆராய்ச்­சி­யை­ய­டுத்து உரு­வாக்­கப்­பட்­டுள்ள புதிய தொழில்­நுட்­ப­மா­னது, நடு­வானில் பறக்கும் போது விமா­னத்தின் இறக்கை சேத­ம­டைந்தால் சேதம­டைந்த பகு­திக்குள் சுய­மாக காபன் நாரை கசியச் செய்து பின்னர் அதனை வன்மையாக்குகிறது. இதனால் விமா­னத்தின் இறக்கையின் சேத­ம­டைந்த பகுதி உடைந்து விழுவது தடுக்­கப்­ப­டு­கி­றது.

இந்த தொழில்­நுட்பம் எதிர்­கா­லத்தில் சுய­மாக சீர­மைக்கக் கூடிய நகப் பூச்­சுகள், பந்தாட்ட மட்டைகள் என்பவற்றின் உருவாக்கத்தை சாத்தியமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.