கேஎப்சியில் பொரித்த கோழிக்குப் பதில் பொரித்த எலியைக் கொடுத்ததாக பரபரப்பு!!

608

KFC

அமெரிக்காவில் கலிபோனியா மாநிலம் வட்ஸ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் டிவோரைஸ் டிக்சன். இவர் அங்குள்ள கே எப் சி உணவகத்துக்குச் சென்று பொரித்த கோழிக்கு ஓடர் செய்ததாகவும் ஆனால் தனக்கு கோழிக்குப் பதில் பொரித்த எலியை கொடுத்ததாகவும் கூறி, அந்தப் படத்தையும் தனது முக நூல் பக்கத்தில் போட்டுவிட்டார். இது உலகம் முழுவதும் இணையதளங்களில் வேகமாகப் பரவியது.

தனது பேஸ்புக்கில் பொரித்த கோழிக்கு பதில் தன்க்கு பொரித்த எலி வந்ததாக தான் கேஎப்சியில் சென்று கூறியதாகவும்.அதன் மேலாளர் தன்னிடம் மன்னிப்பு கோரியதாகவும், உங்கள் பாதுகாப்புக்காக துரித உணவு உண்ணாதீர்கள் எனக் கூறியுள்ளார்.

ஆனால் இதனை அந்த உணவகம் மறுத்து இருக்கின்றது.”எங்களது பொரித்த கோழி பல உருவங்களில் கிடைக்கும். ஆனால் நாங்கள் எலி உருவில் எதுவும் வழங்குவது இல்லை. இந்தப் பிரச்சினை தொடர்பாக இது வரை எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை” என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.