பதவியில் இருந்து விலகத் தயார் : டோனி!!

254

MSD

தோல்விக்கு நான்தான் காரணம் என்றால், தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி அதிரடியாக கூறியுள்ளார்.

முதல் முறையாக இந்தியாவிற்கு எதிரான தொடரை வென்று பங்களாதேஷ் வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்திய அணித் தலைவர் தோனி, செய்தி யாளர் சந்திப்பின் போது, ”இந்திய கிரிக்கெட் தொடர்பாக நடக்கும் அனைத்து மோசமான விஷயங்களுக்கும் நான்தான் காரணம் என்று என் மீது தான் குற்றம் சுமத்தப்படுகிறது. எல்லாம் என்னால் நடக்கிறது என்பது போல, இதைக் கேட்டு பங்களாதேஷைச் சேர்ந்த ஊடகங்கள் கூட சிரிக்கின்றன.

ஊடகங்கள் என்னை மிகவும் நேசிக் கின்றன. எவ்வளவு காலம் நீங்கள் தலைவராக இருப்பீர்கள் என்ற கேள்வி எப்போதும் என்னிடம் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. என்னை நீக்குவது நியாயம் என்று நினைத்தால், அதன் பிறகு இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று நினைத்தால், நான் தலைவர் பதவியில் இருந்து விலகி ஒரு விளையாட்டு வீரராக மட்டும் தொடர தயாராக உள்ளேன்.

என்னைப் பொருத்தவரையில், தலைவர் யார் என்பது ஒரு விடயமே இல்லை. நான் எப்போதுமே தலைவராக வேண்டும் என வரிசையில் நின்றது கிடையாது. தலைவராக இருப்பது என்பது ஒரு வேலை அல்ல பொறுப்பு. தலைவர் பதவியில் இருந்து என்னை நீக்க விரும்பினால் அதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.