ஐ.எஸ் தீவிரவாதிகளால் கைதிகள் கொடூரக் கொலை : அதிர்ச்சிப் படங்கள் வெளியாகின!!

308

ISIS

ஐ.எஸ். தீவிரவாதிகள் கைதிகளை கூட்டாக நீச்சல் தடாகத்தில் மூழ்கடித்தும், காரில் வைத்து குண்டை வெடிக்க செய்தும், ஒரே கயிற்றில் கழுத்தை இறுக்கி கொலைசெய்யும் கொடூர காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், பல நாடுகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதேவேளை ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

வான்வழி தாக்குதல் நடத்துவதோடு, ஈராக் இராணுவத்திற்கு போர் பயிற்சியும் அளித்து வருகிறது. இதற்காக தினமும் 9 மில்லியன் டொலர் செலவு செய்து வருவதாக அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தலைமையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அவர்களுடைய ஆதிக்கம் நிலைத்து வருவது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கியவர்களை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்து, அதுதொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஈராக்கின் மொசூல் நகரில் உளவுபார்த்தவர்கள் என்று குற்றம் சாட்டி தங்களிடம் கைதியாக இருந்தவர்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளனர். மொசூல் 5 கைதிகளை ஒரே கூண்டில் அடைந்து தீவிரவாதிகள் தண்ணீருக்குள் இறக்கி உள்ளனர். சுமார் 7 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் இந்த கொடூரச்சம்பவங்கள் பதிவாகி உள்ளது. 5 கைதிகளும் இறந்த பின்னர் மேலே தூக்கப்படுகின்றனர். அவர்கள் தண்ணீருக்குள் துடிப்பதை, அங்கிருக்கும் கமராக்கள் மூலம் படம்பிடிக்கப்படுகிறது.

இதற்கிடையே கார் ஒன்றில் கைதிகள் கூட்டாக அடைக்கப்பட்டு, ரொகெட் லோஞ்சர்களால் சுட்டுக் கொலை செய்யப்படும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. பழைய காரில் கைதிகளை உள்ளே அடைத்து வைத்து, சுட்டுக் கொலை செய்யப்படுகின்றனர். மேலும், ஒரே கயிறில் 7 பேரை கட்டிவைத்து, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன என்று டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவும் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக புதிய திட்டங்களையும் உலக நாடுகள் வகுத்து வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரம் மற்றும் நாடு கடந்த தாக்குதல்கள் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.