138 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி!!

259

SL

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இதில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.

எனினும் அவ்வளவாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காத பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வரிசையாக வெளியேறினர்.

முடிவில் 42.5 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட அந்த அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

அந்த அணி சார்பாக அதிக பட்சமாக முஹமட் கபீஸ் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

பந்துவீச்சில் தரிந்து குஷல் 5 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளதோடு, தம்மிக்க பிரசாத் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

அடுத்ததாக இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுதாடிவரும் இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கட்டை இழந்து 70 ஓட்டங்களை பெற்றுள்ளது.