உலகின் சிறந்த சகல துறை வீரராக ஷாகிப் அல்ஹசன்!!

268


Shakib-Al-Hasan

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷா கிப் அல் – ஹசன் அனைத்து வகை­யான கிரிக்கெட் போட்­டிகளிலும் சிறந்த சகல துறை வீரராகத் தேர்வு செய்­யப்­பட்­டுள்ளார்.



ஐ.சி.சி சகலதுறை வீரர் தர­வ­ரிசை பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டது. இதில் இலங்கை வீரர் தில்ஷானை பின்­னுக்கு தள்ளி, 4 புள்­ளிகள் அதிகம் பெற்று முதலிடத்தைப் பிடித்தார் ஷாகிப். இந்­தி­யா­வுக்கு எதி­ரான தொடரில், பங்களாதேஷ் அணிக்­காக 3 ஒருநாள் போட்­டி­களில் விளை­யாடி 123 ஓட்டங்களை (52,51,20) ஷாகிப் பெற்றார்.

அதேபோல் இந்த 3 ஒருநாள் போட்­டி­களிலும் 3 விக்­கெட்­டு­க­ளையும் அவர் கைப்­பற்­றி­யி­ருந்தார். சகலதுறை வீரர் பட்­டி­யலில் ஷாகிப் அல்– ஹசன் 408 புள்­ளி­க­ளுடன் முத­லி­டத்தை பிடித்தார். தில்ஷான் 404 புள்­ளி­க­ளுடன் 2ஆவது இடத்தையும், இலங்கை அணித் தலைவர் எஞ்சலோ மெத்தியூஸ் 3ஆவது இடத்தையும் பெற்றனர்.