பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷா கிப் அல் – ஹசன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த சகல துறை வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி சகலதுறை வீரர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இலங்கை வீரர் தில்ஷானை பின்னுக்கு தள்ளி, 4 புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடத்தைப் பிடித்தார் ஷாகிப். இந்தியாவுக்கு எதிரான தொடரில், பங்களாதேஷ் அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 123 ஓட்டங்களை (52,51,20) ஷாகிப் பெற்றார்.
அதேபோல் இந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் 3 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியிருந்தார். சகலதுறை வீரர் பட்டியலில் ஷாகிப் அல்– ஹசன் 408 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். தில்ஷான் 404 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தையும், இலங்கை அணித் தலைவர் எஞ்சலோ மெத்தியூஸ் 3ஆவது இடத்தையும் பெற்றனர்.