வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!!(படங்கள், காணொளி)

479


வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று (27.06) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது

காலை 08 மணிக்கு ஸ்நாபன அபிஷேகத்துடன் ஆரம்பமாகி வசந்தமண்டப பூசையூடன் எம்பெருமாட்டி உள்வீதி வலம்வந்து 10 மணியளவில் அம்பாள் தேரில் ஆரோகணித்தார்.



அத்துடன் எம்பெருமாட்டி வெளிவீதி வலம் வந்து மதியம் 1 மணியளவில் அம்பாளுக்கு பச்சைசாத்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் தேரில் ஆரோகணித்து நவசக்தி அர்ச்சனை நடைபெற்றது.

-விஜிதரன்-



2 3 4 5 6