மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை!!

278

Mers

மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தென்கொரியாவிற்கான இலங்கைத் தூதுவர் தேசந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

சியோல் மற்றும் பியோன்டெக் ஆகிய நகரங்களே மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் அதிகளவு பாதிப்பினை எதிர்நோக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தென்கொரியாவிற்கான தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கையர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், தென்கொரியா வாழ் இலங்கையர்களுக்கு பேஸ்புக் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

மேர்ஸ் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் தென்கொரிய அரசாங்கத்துடன் இணைந்து நோய் தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் 29 பேரின் உயிர்களை காவுகொண்ட மேர்ஸ் (MERS) வைரஸின் தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த வைரஸ் தாக்கத்தினால் 180 பேர் பாதிப்புக்குள்ளானதாக தென்கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.