பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி இலங்கை அணி!!

278


SL

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 153 என்ற இலக்கை பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது.



இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.



இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 25ம் திகதி கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகியது.



இதில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.


எனினும் அவ்வளவாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காத பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வரிசையாக வெளியேற, 42.5 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட அந்த அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இதனையடுத்து முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி 315 ஓட்டங்களை குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.


இதன்படி 177 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்க தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த பாகிஸ்தானுக்கு அஷ்கர் அலி (117 ஓட்டங்கள்) அதிரடியாக ஆடி வலுச் சேர்த்தார்.

இந்தநிலையில் போட்டியின் நான்காம் நாளான இன்று 329 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது பாகிஸ்தான் அணி.

இலங்கை சார்பில் பந்து வீச்சில் தம்மிக்க பிரசாத் 4 விக்கெட்டுக்களையும் சமீர மூன்று விக்கெட்டுக்களையும் மெத்தியூஸ் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

இதன்படி இலங்கைக்கு 153 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


5ம் நாளான நாளை இலங்கை அணி இலகு வெற்றியை பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.