போரில் கணவன்மாரை இழந்தவர்கள் பலாத்கார பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் : ஏஎவ்பி!!

268

Abuse

போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள், தொழில்களை பெற்றுக்கொள்ளும் போது பலாத்காரமாக பாலியல் இம்சைகளுக்கு இசைய வைக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏஎவ்பி செய்தி சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்போது தாம் தமது சமூகத்தினரின் உடல்ரீதியான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் உள்ளாவதாக பாதிக்கப்பட்ட பெண்களை கோடிட்டு செய்திசேவை தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை கணவன்மாரை இழந்த பெண்களுக்கு தமது சமூகத்திலேயே உரிய இடம் வழங்கப்படுவதில்லை என்று சமூக சேவையில் ஈடுபட்டுள்ள கிறிஸ்டின் மனோகரன் என்பவர் தெரிவித்துள்ளார்.

தமது நிலையை பலர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக கணவன்மாரை இழந்த பலர் வெளிநாட்டு செய்திசேவையிடம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் சிலர் குற்றவாளிகளால் பாலியல் தொழில்களுக்கும் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதேவேளை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண மனிதரைப்போன்று நடந்து கொள்வதனால் அவரிடம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வை காணமுடியும் என்று நம்புவதாக வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.