பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபாரவெற்றி!!

243


SL

பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கொழும்பு ஆர். சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் இன்றாகும்.



கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை அணிக்காக அபாரமாக பந்து வீசிய தரிந்து கௌஷால் 5 விக்கெட்டுகளை பெற்றார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை அரம்பித்த இலங்கை அணி 121.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 315 ஓட்டங்களை பெற்றது. இதனால் 177 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸில் பின்னிலை பெற்ற நிலையிலேயே பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.



பாகிஸ்தான் அணி சார்பாக அஷ்கர் அலி 117 ஓட்டங்கள் அதிரடியாக பெற்றுக்கொடுத்தார். இறுதியில் 329 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.



இலங்கை சார்பில் பந்து வீச்சில் தம்மிக்க பிரசாத் 4 விக்கெட்டுக்களையும் சமீர 3 விக்கெட்டுக்களையும் மத்தியூஸ் 2 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.


இதனையடுத்து இந்த போட்டியில் வெற்றிபெற இலங்கை அணிக்கு 153 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் களம் இறங்கிய இலங்கை அணி 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.


இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 26.3 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 153 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.

இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களையும் மத்தியூஸ் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

முன்னதாக முதலாவது டெஸ்ட போட்டியை பாகிஸ்தான் கைப்பற்றியது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1 க்கு 1 என சம நிலைக்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது