ஆழ் கிணற்றில் வீழ்ந்த 10 வயது சிறுமியை இராணுவீரர் காப்பாற்றிய சம்பவம் முல்லைத்தீவு பிரதேசத்தில் கடந்த வியாழன் (25.06) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மகாவித்தியாலய சிறுமி தவறுதலாக ஆழ் கிணற்றில் விழுந்துள்ளார். இதனால் பிள்ளைகள் உதவுமாறு கதறினார்கள்.அழும் குரல் பாடசாலைக்கு அருகில் வீடு அமைத்துக்கொண்டிருந்த இராணுவத்தினருக்கு கேட்டது பரபரப்பையடுத்து இரணுவத்தினர் பாடசாலைக்கு வந்தனர்.
உடன் செயற்பட்ட L.A.P Kumara என்ற இராணுவ வீரர் கிணற்றில் உடன் குத்ததுடன் மற்றைய இராணுவ வீரர்களுடன் இரு இராணுவத்தினர் கயிற்றின் உதவியுடன் சிறுமியை கிணற்றிலிருந்து மீட்டனர்..
சிறுமிக்கு கைகளிலும் சிறுகாயங்கள் ஏற்பட்டதுடன் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது. சிறுமியின் உறவினர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகமும் கிணற்றில் குதித்து சிறுமியை காப்பாற்றிய L.A.P.குமார என்ற இராணுவ வீரருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
Share the post "முல்லைத்தீவில் கிணற்றில் விழுந்த பாடசாலைச் சிறுமியை காப்பாற்றிய இராணு வீரர்!!"