பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் : புதிய அரசாங்கத்தை அமைப்பேன் : மஹிந்த!!

316

Mahinda

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மெதமுலன்னவில் இடம்பெற்ற விசேட நிகழ்விலேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் சுதந்திரக்கட்சியின் முன்னாள் எம்.பி.க்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் உட்பட பெருமளவான ஆதரவாளர்களும் பங்கேற்பார்கள் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பின்னரும் மக்கள் எமக்கு தொடர்ந்து ஆதரவையும் ஆசிர்வாதத்தையும் வழங்கி வருகின்றனர். இதற்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கொண்டு புதிய ஜனாதிபதிக்கு சரியான முறையில் இடம்கொடுத்தேன். வரலாற்றில் எந்த தலைவரும் இவ்வாறு செய்து இருக்க மாட்டார்கள். ஆனால் எனக்கு எதிராக பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் போயா தினமான இன்றைய நன்நாளில் என்னுடைய ஊருக்கு வந்துள்ள உங்களின் கோரிக்கையே நான் ஒரு போதும் மறுக்க மாட்டேன். உங்களுடைய கோரிக்கைகளுக்கு நான் மதிப்பளிக்கின்றேன். எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் நான் போட்டியிட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பதோடு நாட்டில் தடைப்பட்டிருக்கும் அபிவிருத்திகளை முன்னெடுத்து மக்களுக்கு பாரிய சேவை செய்வேன்.

மேலும் பயங்கரவாதிகளுக்கு பண உதவிகளை வழங்க அமைச்சரவையில் தீர்மானங்களை கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த தீர்மானத்து ஆதரவு வழங்கப்படவில்லை.

அவ்வாறு அந்த தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கப்பட்டிருந்தால் உலகத்திலேயே முதன் முதலாக பயங்கரவாதிகளுக்கு பண உதவி செய்த முதல் நாடாக எமது நாடு காணப்பட்டிருக்கும்.

எனவே நாட்டை அழிவுப்பாதையில் இருந்து மீட்க நாம் முன் வரவேண்டும். யார் எதனை சொன்னாலும் அதனை கருத்தில் கொள்ளாமல் உங்களின் கோரிக்கையை மதித்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பேன்.

கட்சித் தலைவர்களும் நாட்டு மக்களும் சமயத் தலைவர்களும் என்னை மீண்டும் அழைப்பது பழிவாங்குவதற்காக அல்ல. நாட்டை பாதுகாப்பதற்காகும்.