சங்கக்கார விலகல் : இலங்கை அணியில் இணைந்த உபுல் தரங்க!!

261

sanga

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் சங்கக்கார இடம்பெறமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கக்கார ஏற்கனவே தான் பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையிடம் தெரிவித்திருந்தார்.

அதன் படி, தனிப்பட்ட காரணத்திற்காக 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக உபுல் தரங்க அணியில் இணைந்துள்ளார்.

உபுல் தரங்க, இறுதியாக கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்குபெற்றார்.

தற்போது இவர் மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் 2 டி20 போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளனர்.

உபுல் தரங்க, 177 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5343 ஓட்டங்களையும், 19 டெஸ்ட் போட்டிகளில் 1019 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.