தருமபுரி இளவரசனின் 2வது ஆண்டு நினைவு தினம் : 195 கிராமங்களில் தடை உத்தரவு!!

294

ilavarasan_002

தருமபுரியை சேர்ந்த இளவரசனின் 2வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்த மாவட்டத்தின் 195 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலித் இளைஞரான இளவரசன், வேறு சமூகத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

இந்த திருமணத்திற்கு திவ்யா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து தரும்புரி சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு யூலை 4ம் திகதி இளவரசன் மர்மமான முறையில் ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தார்.

யூலை 4ம் திகதி இளவரசனின் 2வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

எனவே, வன்முறை சம்பவம் நிகழ்ந்த நத்தம் காலனி உள்ளிட்ட 195 கிராமங்களில் ஒரு வார காலத்திற்கு 144 தடை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.