விண்ணில் பறந்து சென்ற மர்மப் பொருள் : நாசா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!

355


Capture

ஒளி உமிழும் மர்மப் பொருள் விண்ணில் பறந்து செல்லும் காட்சியை நாசா வெளியிட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், விண்ணில் ஒரு மர்மப் பொருள் வெளிச்சத்துடன் பாய்ந்து செல்வது போல் உள்ளது.

ஆனால் இந்த பொருள் விண்கல்லோ அல்லது நெருப்பு பந்தோ அல்ல. அமரிக்காவின் தென் கிழக்கு பகுதியில் நாசாவின் 5 கமெராக்கள் இதனை படம் பிடித்து உள்ளன. இந்த பொருள்,ஒளியை உமிழ்ந்து கொண்டு மணிக்கு 14,500 மைல் வேகத்தில் நகர்ந்து செல்கிறது.



இந்த வேகம் விண்கற்களை விட குறைந்த வேகமாகும். புவீஈர்ப்பு விசையில் இருந்து இந்த பொருள் மேல் நோக்கி செல்கிறது, ஆனால் விண்கற்கலாக இருந்தால் அது கீழ் நோக்கிதான் நகரும்.



தற்போது, இந்த வீடியோவிற்கான எந்த விளக்கத்தையும் நாசா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.