சனி-வியாழன் கிரகங்களை பூமியில் இருந்து தெளிவாக பார்க்கலாம்!!

354

Planet

கோள்மண்டலத்தின் பிரகாசமான சனி மற்றும் வியாழன் ஆகிய கிரகங்கள், ஜூலை முதலாம் திகதி முதல் சூரியன் அஸ்தமனத்தின் பின்னர் பூமியில் இருந்து தெளிவாக பார்க்கக்கூடியதாக உள்ளன.

இந்தநிலையில் இன்று அவற்றை பூமியின் பல பகுதிகளிலும் இருந்து தெளிவாக பார்க்கக்கூடியதாக இருக்கும் என்று ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவகம் அறிவித்துள்ளது.

இந்த இரண்டு கிரகங்களும் வருடத்துக்கு ஒருமுறை அருகருகே சஞ்சரிக்கின்றன.
எனினும் இந்த தடவை பார்க்கும்போது இரண்டும் மோதிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக சஞ்சரிக்கின்றன.

இதன்காரணமாகவே இந்த கிரகங்களையும் தெளிவாக பார்க்கக்கூடியதாக இருக்கும் என்று நிறுவகத்தின் ஆய்வாளர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார்.