முதலைக்கு முத்தமிட வேண்டும் : நேர்முகத் தேர்வில் வியப்பூட்டும் சோதனை!!(படங்கள்)

394


தற்போதைய போட்டி நிறைந்த உலகத்தில் நிறுவனங்கள் அனைத்தும் தமது உற்பத்திப் பொருளை வாடிக்கையாளரிடம் சேர்ப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான செயல்களில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில் முதல் முறையாக வேலைக்கு ஆட்களை சேர்க்க சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வியப்பூட்டும் ஒரு சோதனையை நேர்முகத்தேர்வில் அறிமுகப்படுத்தியுள்ளது.



சீனாவில் உள்ள காங்டான் மகாணத்தில் உள்ள காங்கோழு என்ற இடத்தில் சுகாதார பொருட்களை விற்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் முதலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சுகாதார பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. தனது நிறுவனத்தில் 9 விற்பனை பிரநிதியை பணியில் அமர்த்த திட்டமிட்ட அந்நிறுவனம், அதற்கான நேர்முகதேர்வு ஒன்றையும் நடத்தியது.

இதை கேட்டு வேலையில் சேரும் ஆர்வத்துடன் குவிந்த பலர், வாயிலில் உயிரோடு வைக்கப்படிருந்த ஒரு முதலையை அவர்கள் ஆர்வத்துடன் பார்த்தவாறு கடந்து சென்றனர். பின்னர் உள்ளே சென்ற பிறகுதான் அவர்களுக்கு தெரிந்தது. நேர்முகத்தேர்வின் முதல் படியே உயிரோடு இருக்கும் அந்த முதலைக்கு முத்தமிடுவது என்பதுதான்.



இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களுக்கு ஒரே ஒரு விடயம் மாத்திரம் ஆறுதல் அளிக்கும் விடயமாக இருந்தது. முதலையின் வாய்ப்பகுதி கட்டப்பட்டிருந்தது. இந்த முதல் சுற்றில் முதலைக்கு தைரியமாக முத்தமிடுபர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மட்டுமல்லாமல், ஆயிரம் யுவான் பரிசுத்தொகையாக பெற முடியும். இருந்தாலும் பல பெண்கள் இந்த சோதனைக்கு முன்வர தயங்கினர்.



அதேநேரத்தில் ஆண்கள் பலர் மிகுந்த தைரியத்துடன் முன்வந்தனர். ஆனால், பெண்களை மாத்திரமே பணிக்கு எடுப்பதாக கூறிய நிறுவனம், ஆண்களை பங்கேற்கவிடவில்லை.


முதலையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களிலையே தங்களுடய சுகாதார பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதால் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் முதலையின் மீதான அச்சத்தில் இருந்து வெளிவரவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்த நேர்முகத்தேர்வை காண பெருந்திரளான மக்கள் அங்கு கூடியிருந்தனர்.

சீனாவில் முதலையில் இறைச்சியில் சிறப்புமிக்க சுகாதார பலன்கள் இருப்பதாக சில பகுதி மக்கள் நம்புகின்றனர். சுவைமிக்க உணவுபொருளாகவும் முதலையின் இறைச்சி அங்குள்ள மக்கள் உட்கொள்கின்றனர். மேலும், முதலையின் பித்தம் ஆஸ்த்மா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் சிறந்த மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


1 2 3 4