நாயைத் திருமணம் செய்வதாக கூறியதால் விளைந்த வினை!!

406

Dog

புளோரிடாவைச் சேர்ந்த ஒருவர், பேஸ்புக்கில் போட்ட பதிவு ஒன்று அவர் வேலைக்கே உலை வைத்துள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றம், ஓரினச் சேர்கையாளர்கள் திருமணம் புரிய இருந்த தடையை நீக்கி தீர்ப்பளித்தது. இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உட்பட பலர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த தீர்ப்பை கிண்டல் செய்யும் வகையில், ரையன் உஹ்லர் (32) என்பவர் தனது பேஸ்புக்கில், ‘‘எனது நாய் ரோக்கோவைதான் நான் அதிகமாக காதலிக்கிறேன். அதுவும் என்னை விரும்புகிறது. ஆகையால், விரைவில் ஒரு நாள் நாங்களும் திருமணம் புரிவோம். இனி, நாம் இந்த வகைக் காதல்களிலும் கவனம் செலுத்துவோம் என நம்புகிறேன்’’ என்று வேடிக்கையாக எழுதியிருந்தார்.

இவர் பணிபுரிந்த கிரேஸ் முதலீட்டு குழுமம், டிஜிட்டல் சந்தைப்படுத்தும் நிபுணராக இருந்த ரையனை ஒரினச் சேர்க்கையாளர் திருமணத்தை கிண்டல் செய்வதாக எண்ணி பணியிலிருந்து விலக்கிவிட்டது.

வேலையிழந்த ரையன், ‘‘நான் அரசியலை பற்றி நடுநிலையான கருத்தே வைத்துள்ளேன். ஒரினச் சேர்க்கையாளர் திருமணத்தை நான் கிண்டல் செய்ய நினைக்கவில்லை’’ என வருத்தம் தெரிவித்தார்.