வவுனியா சேமமடு பகுதியில் விஷமிகளால் காட்டுக்குத் தீவைப்பு!!(படங்கள்)

336

வவுனியா சேமமடுப்பகுதிலிருந்து இளமருதங்குளம் செல்லும் பிரதான வீதியின் இருமருங்கிலும் வவுனியா மாவட்ட வனப்பாதுகாப்பு திணைக்களம் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கக்கூடிய சக்திவளங்கள் அமைச்சின் அதிகாரிகளால் சில வருடங்களுக்கு முன்னர் நாட்டப்பட்ட பெறுமதியான மரக்கன்றுகளான வீரை, முதிரை, பாலை, மகோகனி, தேக்குமரக்கன்றுகள் நாட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக வவுனியா மாவட்டத்தில் வெப்பநிலை அதிகமாக காணப்படுவதால் இம் மரங்களைச் சூழவுள்ள பகுதிகள் அனைத்தும் தண்ணீர் இன்மை காரனமாக வறட்சியால் வாடியுள்ளது. இதன் காரணமாக விஷமிகள் சிலரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.07.2015) இம் மரக்கன்றுகள் மீது தீயிட்டு இம் மரங்கள் அனைத்தும் எரியூட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வனப்பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இன்று (06.7.2015) இப் பிரதேசத்திற்குச் சென்ற வன பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இதனைப் பார்வையிட்டுள்ளனர்.

-பிராந்திய செய்தியாளர்-

11668061_1604989416422561_677114263_n 11694332_1604990893089080_218886592_n  11719880_1604990873089082_1277895598_n11714316_1604990883089081_1455207660_n (1)