கல்லூரியின் அருகிலேயே நடமாடும் வீடு அமைத்து தங்கிவரும் மாணவர்!!(படங்கள்)

864


அமெரிக்காவில் பண சுமையை தவிர்ப்பதற்காக கல்லூரியின் அருகிலேயே மாணவர் ஒருவர் நடமாடும் வீடு அமைத்து தங்கி வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் ஜோயல் வெப்பர் (25). இவர் தனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கல்லூரிக்கு அருகில் வாடகை வீட்டில் குடியேறுவதை தவிர்த்து விட்டார்.



மேலும் அந்தப் பகுதியில் சிறிய வீட்டுக்கே 800 டொலர்கள் வரை வாடகை தர வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே பணச்சுமையை அதிகரிக்க கூடாது என்று முடிவு செய்து வித்தியாச முயற்சி ஒன்றை மேற்கொண்டார்.

அதன்படி இரண்டு ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் மற்றவர்கள் அளித்த மூலப்பொருட்களை கொண்டு சுமார் 20 ஆயிரம் டொலர்கள் செலவில் நடமாடும் வகையில் மரவீடு ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனுள் கழிவறை மின்வசதி, சமையல் அறை, குளிப்பதற்கு ஷவர், படுக்கையறை என அனைத்து வசதிகள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.



தற்போது டல்லாஸ் பகுதியில் வாழ்ந்துவரும் ஜோயல் வெப்பர் வரும் கல்லூரி விடுமுறையின்போது இங்கிருந்து சுமார் 200 மைல் தூரத்தில் உள்ள ஆஸ்டின் நகருக்கு இந்த வீட்டை நகர்த்தி செல்ல திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



1 2 3