சிம்புவைக் கண்டு பயந்த சிவகார்த்திகேயன்!!

290

Simbu

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குனர் பொன்ராம் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியிருக்கும் படம் ரஜினி முருகன். டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் லிங்குசாமி தயாரித்துள்ளார்.

இப்படம் வருகிற ஜுலை 17ம் திகதி வெளியிடப்போவதாக அறிவித்து வந்தனர். அன்றைய தேதியில் தனுஷின் மாரி படமும், சிம்புவின் வாலு படமும் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் விலகியிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

லிங்குசாமி தயாரித்த உத்தமவில்லன் படத்திற்கு ஏற்பட்ட அதே பிரச்சனை இப்படத்திற்கும் ஏற்பட்டுள்ளதாகவும் படத்தின் வெளியீட்டுத் திகதியை ஓகஸ்ட் 14ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.