தமிழ்த் தலைமைகளில் மாற்றம் ஏற்படும் வரை தமிழ் மக்களின் தலைவிதி மாறப்போவதில்லை – தேர்தல் களத்தில் தனித்துப் போட்டி! – டக்ளஸ்

328


epdpnewsdear_1_15550

மாற்றம் என்பது தென்னிலங்கை அரசியலில் மாத்திரம் வந்தால் போதாது. வட – கிழக்கு தமிழ் மக்களுடைய தலைமைகளிலும் அந்த மாற்றம் ஏற்பட வேண்டும். வட –கிழக்கு தமிழ் தலைமைகளில் மாற்றம் ஏற்பட்டால் தான் கிடைக்கின்ற வாய்ப்புகள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை இலகுவாகவும் விரைவாகவும் தீர்க்க முடியும் என்று தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தமிழ்த் தலைமைகளில் மாற்றம் ஒன்று நிகழாத வரை தமிழ் மக்களின் தலைவிதி மாறாது என்பதுதான் எங்களுடைய தேர்தல் கள பிரதான கோசம் எனவும் தெரிவித்தார்.



தினக்குரலுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவருடனான நேர்காணல் வருமாறு:-



கேள்வி :- நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தனித்து களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளீர்கள். இதன் பின்னணி என்ன?



பதில்     :-    எங்களுடைய நீண்டகால அரசியல் அனுபவத்தையும் எமது மக்களுடைய நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வந்த ஈ.பி.டி.பி தனித்துப் போட்டியிட வேண்டுமென்ற கோரிக்கைகளையும் கணக்கிலெடுத்தே நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளோம்.


கேள்வி :-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் உங்களுக்குமிடையிலான சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்து. இந்த சந்திப்பில் எவ்வாறான விடயங்கள் ஆராயப்பட்டன?

பதில்:- பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில், அத்தேர்தலில் தங்களுடன் இணைந்து போட்டியிடுமாறு ஜனாதிபதி எம்மிடம் இச் சந்திப்பில் கேட்டிருந்தார்.அதற்கு நாம் எடுத்துள்ள தினத்துப் போட்டியிடும் முடிவை அவரிடம் தெளிவுபடுத்தியிருந்தோம்.


கேள்வி :-நடைபெறவுள்ள தேர்தலில் உங்களுடைய கட்சி எந்தெந்த இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது?

பதில் :- மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி  எக்காலத்திலும வட – கிழக்கு பிரிக்க முடியாத அலகு என்பவை தான் எங்களுடைய ஆரம்ப கால கோசமாக இருந்தது.அந்தவகையில் தான் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலிலும் வடக்கு கிழக்கில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம்.

கேள்வி :-எவ்வாறான கோரிக்கைகளை மக்கள் முன் வைத்து இத்தேர்தலில் களமிறங்கவுள்ளீர்கள்?

பதில் :- இத் தேர்தலில் தமிழ்த் தலைமைகளில் மாற்றம் ஏற்படாத பட்சத்தில் எமது மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்ற கோசமே பிரதான அம்சமாக அமையவுள்ளது.


அதாவது மாற்றம் ஒன்று நிகழாதவரை தமிழ் மக்களின் தலைவிதி தானாக மாறாது என்பதுதான் எங்களுடைய பிரதான கோசம்.
கடந்த அறுபது வருடங்களில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தமிழ்த் தலைமைகள் சரியான முறையில் கையாளவில்லை என்பதுதான் என்னுடைய கவலை. கிடைத்த வாய்ப்புகளைக் கூட சரியாகப் பயன்படுத்தாது பல தவறுகளை இழைத்துள்ளார்கள். இவற்றுக்கு கடந்த காலங்களில்  பல உதாரணங்களைக் கூறலாம்.

இந்தத் தவறுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளின் தவறா? அல்லது அரசியல் பேரம் பேசும் பலத்துடன் இதுகாலவரை இருந்து வந்த தமிழ்பேசும் தலைமைகளின் தவறா என்பதை நாம் ஆராய வேண்டியிருக்கிறது.
எனவே, இந்தத் தேர்தல் பல கேள்விகளுக்கும் பலருடைய தில்லுமுல்லுகளுக்கும் சிறந்த ஒரு களமாக அமையும் என நான் நம்புகின்றேன்.

எனவே, இந்தத் தேர்தல் பல கேள்விகளுக்கும் பலருடைய தில்லுமுல்லுகளுக்கும் சிறந்த ஒரு களமாக அமையும் என நான் நம்புகின்றேன்.

நீண்டகாலமாக நாம் எடுத்து வந்த நடைமுறை சாத்தியமான நிலைப்பாடு காரணமாக அந்த நிலைப்பாட்டின் வெற்றி காரணமாக முன்னேற்றம் காரணமாக எங்கள் மீது சேறுவாரி ப+சப்பட்டு வந்தது. பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீhடவு காண முடியாது என்ற அழுத்தங்கள் இருந்த சூழ்நிலையில் அதனை மறுதலித்து: இல்லை ஜனநாயகத் தேர்தலுக்கூடாக, பாராளுமன்றத்தின்; ஊடாகத்தான் தீர்வைக் காணலாம் என்று நாம் கடந்த காலங்களில் முன்னெடுத்து வந்திருந்த சூழ்நிலையில்;: இன்று பலர் எங்களுடைய நிலைப்பாட்டை ஒத்த செயற்பாடுகளில் இறங்குவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

நடைபெறவுள்ள தோடதலில் முன்னாள் போhரளிகள் கூட “ஜனநாயக போhரளிகள் கட்சி” என்ற கட்சியை அ+ரம்பித்து தேர்தல் களத்தில் இறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். இது நாம் கடந்த காலங்களில்; கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கின்றோம்.

நாம் அன்று அந்த நிலைப்பாட்டை எடுத்த பொழுது எம்மீது பலர் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்ததோடு. எம்மீது கொலை அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் என்பன பிரயோகிக்கப்பட்டன. போற்றுவார் போற்றப்பட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும் என்று விட்டுவிட்டு நாம் சரியானதொரு முடிவை அன்று எடுத்தது இன்று வரலாற்றில் அந்த நிலைப்பாடு சரியானதென்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது எமக்கு கிடைத்த வெற்றியாகும்

எனவே, மாற்றம் என்பது தென்னிலங்கை அரசியலில் மாத்திரம் வந்தால் போதாது வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய தலைமைகளிலும் அந்த மாற்றம் ஏற்பட வேண்டும். வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுடைய தலைமைகளிலும் அந்த மாற்றம் ஏற்பட வேண்டும். வடக்கு கிழக்கில் மாற்றங்கள் ஏற்பட்டால்தான் கிடைக்கின்ற வாய்ப்புகள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை இலகுவாகவும் – விரைவாகவும் தீர்க்க முடியும் என்பதுதான் என்னுடைய அனுபவ உண்மையும் நிலைப்பாடும்.

கேள்வி :-முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் மீள்வருகையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்:-    தென்னிலங்கை அரசியலில் யார் இணைந்திருக்கிறார்கள். யார் பிரிந்திருக்கிறார்கள், யார் அரசியல் களத்தில் இறங்கப் போகிறார்கள் என்பது எங்களுடைய பிரச்சினையல்ல வரப்போகின்ற அரசுடன் எமது மக்களுடைய பிரச்சினைகளை எவ்வாறு கையாளப் போகிறோம் என்பதுதான் எங்களுடைய பிரச்சினை.

தென்னிலங்கை யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் இணைந்து வெளிப்படையான அரசியல் உறவை வலுப்படுத்துவதும் இணக்க அரசியலை முன்னெடுப்பதும்தான் எங்களுடைய நிலைப்பாடு அதனைத்தான் எதிர்காலத்திலும் முன்னெடுப்போம்.
மக்களிடம் பேசுவதை மத்தியிலும் மத்தியில் பேசுவதை மக்களிடம் பேசுவதுதான் எங்களுடைய வெளிப்படையான அரசியல். அதனைத் தான் நாம் செய்து வந்திருக்கிறோம். இனிவரும் காலத்திலும் செய்வோம். அதைவிடுத்து வட – கிழக்கில் தமிழ் மக்களுடைய தலைமைகள் என்று கூறிக் கொண்ட குள்ளநரி ஆட்சி நடத்துவோரைப் போன்றது அல்ல எங்களுடைய அரசியல் பயணம்.

கேள்வி :-நல்லாட்சி யுகம் என்று கூறிக் கொண்ட வந்திருந்த மைத்திரி – ரணில் அரசினுடைய கடந்த ஆறுமாத காலத்தில் தமிழர்களுடைய விடயங்களை அவர்கள் கையாண்ட விதத்தினை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் :-மைத்திரி – ரணில் அரசின் நூறுநாள் வேலைத்திட்டம் தமிழ் மக்களிடம் சென்றடையவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டு தமிழ் மக்களிடம் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதனை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.
நல்லாட்சி யுகத்தை கொண்டு வந்ததில் பங்கெடுத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றித் தவறிவிட்டது என்று விமர்சனப்படுவதை இன்று காணக்கூடியதாக இருக்கிறது.
கடந்தகாலங்களில் ஈ.பி.டி.பி தனக்கு கிடைத்த அரசியல் பலத்தைக் கொண்டும் அதனுடைய அரசியல் கொள்கை மற்றும் அரசுகளுடன் இருந்து வந்த உறவுகளைக் கொண்டும் பல விடயங்களை சாதித்திருக்கிறது என்பதை இந்த இடத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

வடக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த பெரும்பாலான தமிழர்களுடைய நிலங்கள் எங்களுடைய காலத்தில்தான் விடுவிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 17,522 ஏக்கர் நிலத்தினை யாழ்.மாவட்டத்தில் மாத்திரம் விடுவித்திருக்கிறோம். அதேபோல் கிளிநொச்சியில் இராணுவத்தின் பயிற்சி முகமாக இருந்த 684 ஏக்கருடைய அறிவியல் நகரை நாம் தலையிட்டு விடுவித்துக் கொடுத்திருக்கிறோம்.  இவ்வாறு பல விடயங்களை சாதித்துக் காட்டியிருக்கிறோம்.

ஆனால், நல்லாட்சி யுகத்தை கொண்டு வந்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்ட கூட்டமைப்பு கடந்த ஆறுமாத காலத்தில் அரசியல் கைதிகளுடைய விடுதலையிலோ, காணி விடுவிப்பிலோ அல்லது தமிழ் மக்களுடைய இதர பிரச்சினைகள் தொடர்பிலோ கவனமெடுக்காது போலியான விடயங்களை அதாவது இரகசிய முகாம்கள் இருக்கின்றன போன்ற பல பொய்யான கருத்துக்கள் கூறி மக்களை அடிக்கடி குழப்பும் கைகங்கரியங்களையே செய்து வந்திருந்தது.

தமிழ் மக்களுடைய பிரச்சினையை யார் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவளிக்க எதிர்காலத்தழல் முடிவு செய்வோம் என்று கூட்டமைப்பு இன்று அறிவித்திருக்கிறது. ஆனால், கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்தான் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் கூடுதலாக உள்வாங்கப்பட்டிருந்தன. ஆனால் அந்நேரத்தில் அதனை கூட்டமைப்பு கவனத்தில் எடுக்கவில்லை.

சம்பூர் காணி விடுவிப்பு தங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி என்றும் கூட்டமைப்பு இன்று கூறுகிறது. ஆனால் கூட்டமைப்பு கூறுவதுபோல் உண்மையில் சம்பூர் மக்களுக்கு அந்தக் காணிகள் கிடைக்கவில்லை.

மைத்திரி – ரணில் அரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு என்று கூறிய எதனையும் நிறைவேற்றாது தெற்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்காக கூட்டமைப்பு காத்திருப்பதையே இன்று காணக்கூடியதாக இருக்கிறது.
உண்மைச் சொல்ல வேண்டுமெனில் நல்லாட்சி யுகத்தை கூட்டமைப்பு இரண்டு வகையாக இந்த ஆறுமாதங்களும் கையாண்டுள்ளது. ஒன்று நல்லாட்சியை சரியான முறையில் தமிழ் மக்களுக்கு பயன்படுகின்ற வகையில் பயன்படுத்தவில்லை. இரண்டாவது பயன்படுத்தக்கூடிய சக்திகளுக்கு குறுக்காக நின்றிருக்கிறார்கள். இவை மாத்திரமே நடந்திருக்கின்றன.

கேள்வி :- இம்முறைத் தேர்தலில் உங்களுடைய கட்சியின் வெற்றி வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன?

பதில் :- தேர்தலில் சிலர் போட்டியிட வேண்டுமென்பதற்காக போட்டியிடுவார்கள். சிலர் வெற்றி பெற்று மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற ரீதியில் போட்டியிடுவார்கள். சிலர் தங்களுடைய சுயலாபத்திற்காக தேர்தலை பயன்படுத்த வேண்டும். என்று சிந்தித்து போட்டியிடுவார்கள் இவ்வாறு பல விதமானோர் தேர்தல்களத்தில் இறங்கலாம்.

எவ்வாறிருந்தாலும் ஒரு ஜனநாயக சூழலில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக நடைபெறவுள்ள தேர்தலில் வட – கிழக்கு தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வருவார்கள் என நான் நம்புகின்றேன்.

அதேபோல் நாட்டில் அமைதியான சூழல் ஒன்று உருவாகிவரும் நிலைமையில் தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களுடைய சிந்தனைகளை ஒழுங்குபடுத்தும் வகையிலும் நெறிப்படுத்தும் வகையிலும் செயற்பட வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.

கேள்வி :- அமையவுள்ள அரசிடம் நீங்கள் முன்வைக்கவுள்ள கோரிக்கை என்ன?

பதில் :-எங்களுக்கென்று இலட்சியம், கனவு, இலக்கு என்பன இருக்கின்றன. அதற்கான நடைமுறைச்சாத்தியமான விடயங்களும் எம்மிடம் இருக்கின்றன.

யுத்தம் முடிவடைந்த கால கட்டத்தில் யுத்த சூழுலிலிருந்து மக்களை மீட்டெடுக்கவும் அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அன்று நாம் உறவுகளுக்கு கரம் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், இன்று நாம் உரிமைக்கு குரலாகவும் உறவுகளுக்கு கரமாகவும் இருக்க வேண்டிய சூழல் காணப்படுகின்றது. எனவே அதனை நோக்கியே எமது அரசியல் பயணத்தை முன்னெடுக்க இருக்கின்றோம்.

தமிழ் மக்களுடைய நீண்டகாலப் பிரச்சினைகளை ஒரு இரவில் தீர்த்து விடமுடியாது. அதனை கட்டம் கட்டமாகத்தான் தீர்க்க முடியும்.

எனவே, நீடித்த  ஆட்சியினுடாகத்தான் எமது மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வை காணமுடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதாவது நீடித்த ஆட்சி என்றால் மத்திய அரசு ஒன்று நீடிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஆட்சிக்கு வரும் மத்திய அரசுகளுடன் இணைந்து பயணிப்பதனூடகவே எமது மக்களுடைய பிரச்சினைகளுக்கு கட்டம் கட்டமாக தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பதே. அதுவே என்னுடையதும் எமது கட்சியினுடையதுமான நிலைப்பாடாகும்.

ஏற்கனவே நாம் முன்னெடுத்து முன்னெடுத்து வரும் அரசியல் கைதிகளுடைய விடுதலை, காணி விடுவிப்பு, அரசியல் உரிமை மற்றும் அபிவிருத்தி போன்றவையும் செய்து அரைகுறையாக இருக்கும் விடயங்கள் மற்றும் செய்ய எத்தனித்த விடயங்களும்தான் எங்களுடைய திட்டங்கள் இவற்றையே அமையவுள்ள அரசிடமும் முன்வைத்து எமது பயணத்தை பயணிக்கவுள்ளோம்.

கேள்வி :-     நடைபெறவுள்ள தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகளை இணைத்துக் கொண்டு செல்வது தொடர்பிலான நிலைப்பாட்டினை கொண்டுள்ளீர்களா?

பதில் :-    பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. எங்களுடைய முதலாவது தெரிவு தனித்து களமிறங்குவது. இரண்டாவது தெரிவு பிராந்திய கூட்டு, மூன்றாவது தெரிவு தேசிய கூட்டு. இருந்தாலும் கட்சியில் பலர் தனித்துப் போட்டியிடுவதையே விரும்புகிறார்கள். ஏனெனில் கடந்த காலங்களில் எமது கட்சி மீது பலர் பல்வேறு பொய் விமர்சனங்களை முன்வைத்து வந்தார்கள். எனவே அவர்களுடைய விமர்சனங்களை முறியடிப்பதற்கு எமது இதுவொரு சிறந்த தருணமென கருதுகின்றோம்.