பேரம் பேசும் சக்­தியை நிலை­நாட்­டு­வதன் மூலமே நிரந்­தர அர­சியல் தீர்வு என்ற இலக்கை அடை­ய­மு­டி­யு­ம்!வவுனியாவில் இரா.சம்பந்தன்

699


sammanthan_0

ஜன­நா­யக சூழல் ஏற்­பட்­டி­ருக்கும் நிலை­யிலும் சர்­வ­தேசம் உற்றுநோக்கிக் கொண்­டி­ருக்கும் வேளை­யிலும் நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்தல் மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்
த­தாகும்.



இதில் எமது பேரம் ­பேசும் சக்­தியை நிலை­நாட்­டு­வதன் மூலமே நிரந்­தர அர­சியல் தீர்வு என்ற இலக்கை அடை­ய­மு­டி­யு­மென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்­தார்.

தமிழ் மக்கள் ஒன்­று­பட்டு தமது ஜன­நா­யக பலத்தை உறு­திப்­ப­டுத்­த ­வேண்டும் என கேட்­டுக்­கொண்ட அவர், வட­கி­ழக் கில் 20 ஆச­னங்­களை வெற்­றி­கொள்­வதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இலக்கு எனவும் குறிப்பிட்டார்.



தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தலை­மையில் வட­கிழக்கைச் சேர்ந்த கூட்­ட­மைப்பின் முன் னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாணசபை, உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்கள் பங்­கேற்ற விசேட ஒருங்­கி­ணைப்புக் குழுக்­கூட்டம் நேற்று வவு­னி­யாவில் நடை ­பெற்­றது.



வவு­னியா’ வன்னி இன் ‘விடு­தியில் நேற்றுக் (06.07.2015)காலை 10.30இற்கு ஆரம்­ப­மான இக் கூட்டம் பிற்­பகல் 1.30 வரை நடை­பெற்­றது.இதன்­போது நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எவ்­வாறு செயற்­ப­டப்­போ­கின்­றது,


அதன் இலக்­குகள், வியூகங்கள் தொடர்பில் நீண்­ட நேரம் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மாகாண சபை, உள்­ளூ­ராட்சி மன்றப் பிர­தி­நி­திகள் எவ்­வா­றான பங்­க­ளிப்­புக்­களைச் செய்­ய­வேண்டும் என்­பது குறித்து கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி தலைவர் மாவை. சேனா­தி­ராஜா, பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­க­ளான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், செல்வம் அடைக்­க­ல­நாதன், தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் ஆகி­யோரால் விரி­வாக விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.

இக்­கூட்­டத்தில் பிர­தான உரை­யாற்­று­கை­யி­லேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,


யுத்தம் நிறை­வ­டைந்து 6 வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் மீண்­டு­மொரு பொதுத் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்­கின்றோம். கடந்த காலத்தில் இரண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தல்­க­ளுக்கு தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு முகங்­கொ­டுத்­துள்­ளது. அதே­போன்று மாகாண சபை, உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­க­ளையும் எதிர்­கொண்­டுள்ளோம்.

யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சி­யி­லி­ருந்த போதே இரண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. தற்­பொ­ழுது ஜன­நா­ய­கத்­திற்கு விரோ­த­மான குடும்ப ஆட்சி அகற்­றப்­பட்டு நல்­லாட்­சிக்­கான புதிய ஆட்­சி­யொன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமை­யப்­பெற்­றுள்­ளது. இதனால் மக்கள் தமது ஜன­நா­யகக் கட­மை­களை சுதந்­தி­ர­மாக நிறை­வேற்­று­வ­தற்கு உகந்த சூழல் ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான தரு­ணத்தில் இடம்­பெ­று­கின்ற பொதுத் தேர்தல் மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக உள்­ளது.

ஜன­நா­யகச் சூழல்

பொது மக்கள் தமது ஜன­நா­யகக் கட­மை­களைச் சரி­யாகச் செய்­வ­தற்­கு­ரிய தெளி­வு­ப­டுத்­தல்­களை நாம் முன்­னெ­டுக்­க­வேண்டும். குறிப்­பாக மாகாண சபை உறுப்­பி­னர்கள், உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்கள் அனைத்து மக்­க­ளையும் தமது ஜன­நா­யகக் கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்­கான முக்­கி­யத்­து­வத்தை அவர்­க­ளி­டத்தில் எடுத்­துக்­கூ­ற­வேண்டும். தற்­போ­தைய சூழலில் தமிழ்த் தேசியம் தொடர்­பாக அனை­வரும் இளை­ஞர்­க­ளுக்கு உரிய புரி­தல்­களை ஏற்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மா­ன­தாகும்.


20 ஆசன இலக்கு

2004ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 22 ஆச­னங்­களைப் பெற்­றி­ருந்­தது. கடந்த வட­மா­காண சபைத் தேர்­த­லின்­போது 30 ஆச­னங்­களைத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நிச்­சயம் கைப்­பற்றும் என நான் கூறினேன். அதனை அச் சந்­தர்ப்­பத்தில் அனை­வரும் அக்­க­ருத்தை ஏற்க­மு­டி­யாத ஒரு நிலையில் இருந்­ததை நான் அறிவேன். வட­கி­ழக்கில் கள­மி­றங்­க­வுள்ள நாம் இம்­முறை 20 ஆச­னங்­களை வெற்­றி­பெ­றுவோம் என்ற இலக்கைக் கொண்­டி­ருக்­கின்றோம். இதற்­காக அனை­வரும் ஒன்­று­பட்டு வேற்­று­மை­களை மறந்து இலக்கை நோக்கி பய­ணிக்­க­வேண்டும்.

முக்­கி­ய­மான தருணம்

கடந்த காலத்தில் முக்­கி­ய­மான தேர்­தல்­களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கடந்து வந்­த­போதும் இந்தத் தேர்தல் மிக முக்­கி­ய­மா­ன­தாக உள்­ளது. தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் சர்­வ­தேச ரீதி­யாக முதன்­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்ற நிலையில் இத் தேர்­தலை சர்­வ­தேசம் உன்­னிப்­பாக அவ­தா­னித்துக் கொண்டு இருக்­கின்­றது. ஆட்சி மாற்­றத்தில் பெரும் சக்­தி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இருந்­துள்­ளது. இந்­நி­லையில் புதி­தாக அமை­ய­வுள்ள அர­சாங்­கத்தின் மூலமே எமது தாய­கங்­களில் நீடித்து நிலைத்­தி­ருக்­கக்­கூ­டிய தீர்­வொன்றை எட்­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பங்கள் ஏற்­ப­ட­வுள்­ளன. இவ்­வா­றான நிலையில் எமது பேரம்­பேசும் பலத்தை உறுதி செய்­ய­வேண்டும். அதன் மூலமே ஐக்­கிய இலங்­கைக்குள் அனை­வ­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட அதி­கார பகிர்­வினைப் பெற்றுத் தமி­ழர்கள் அபி­லா­ஷை­க­ளுடன் சுதந்­தி­ர­மா­கவும் பாது­காப்­பா­கவும் வாழ்­வ­தற்­கான ஒரு சூழல் ஏற்­படும். அதனை உறுதி செய்யும் வகை­யி­லேயே தமிழ் மக்­களின் ஜன­நா­யக பல­மான வாக்­குகள் அமை­ய­வேண்டும்.

தேர்தல் விஞ்­ஞா­பனம்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் தயா­ரிக்கும் பணிகள் வேக­மாக இடம்­பெற்று வரு­கின்­றன. வடக்குக் கிழக்கில் வாழும் ஒவ்­வொரு பொது மக்­கனின் உள்­ளக்­கி­டக்­கையை உள்­ளீர்த்­த­வாறே அது அமை­ய­வுள்­ளது. குறிப்­பாக யுத்­தத்தின் பின்­ன­ரான நிலையில் தமிழ் மக்கள் எதிர்­நோக்கும் அன்­றாடப் பிரச்­சி­னை­களை முழு­மை­யாக இவ்­விஞ்­ஞா­பனம் உள்­ள­டக்­க­வுள்­ளது.

குறிப்­பாக அர­சியல் கைதிகள் விடு­தலை, காணாமல் போனோர் தொடர்­பான பிரச்­சினை, மீள்­கு­டி­யேற்றம் , பெண்­களைத் தலை­மைத்­து­வ­மாகக் கொண்ட குடும்­பங்­களின் வாழ்­வா­தாரம், வேலை­யற்ற இளைஞர் யுவ­திகள் பிரச்­சி­னைகள் போன்ற பல்­வேறு விட­யங்கள் ஆழ­மாக ஆரா­யப்­பட்டு உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளன.

அதே­போன்று நிரந்­தர அர­சியல் தீர்வு குறித்த பிர­தான விட­யமும் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளது. அர­சியல் தீர்வு என்­பது வட­கி­ழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்­களை மையப்­ப­டுத்­தி­ய­தா­கவே அமைய வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அவ்வாறான நிலையில் எமது தேர்தல் விஞ்ஞாபனம் அதனைத் தெ ளிவாக அனைவருக்கும் உணர்த்துவதாய் அமையவுள்ளது.

ஒளிவு மறைவு தேவையில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிரந்தர அரசியல் தீர்வு விடயத்தில் ஒ ளிவு மறைவின்றியே தமது நிலைப்பாட்டை முன்வைக்கவுள்ளது. பெரும்பான்மை சமூகம் ஆட்சேபிக்காத வகையில் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை பெற்று தலைநிமிர்ந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்டே எமது நிரந்தர அரசியல் தீர்வு பரப்பு அமையவுள்ளது. இதில் பெரும்பான்மை சமூகத்திற்கோ அல்லது வேறு தரப்புக்கோ ஒ ளிவு மறைவாகச் செயற்படவேண்டிய தேவை எமக்கில்லை என்றார்.

நன்றி :வீரகேசரி இணையம்