சீனாவை தாக்கிய கடும்புயலால் 100 பேர் பலி : 54 ஆயிரம் வீடுகள் முற்றாக தரைமட்டம்!!

429


சீனாவை நேற்று கடுமையான புயல் தாக்கியதில் சுமார் 104 பேர் பலியாகியுள்ளதாகவும், 54 ஆயிரம் வீடுகள் உருக்குலைந்து போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் உள்ள Jinxiang மாகாணத்தில் சூறாவளி காற்று தாக்கும் என அந்நாட்டு வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.



இந்நிலையில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 5.25 மணியளவில் Saomai என பெயரிடப்பட்ட புயல் மணிக்கு சுமார் 216 கி.மீ வேகத்தில் கடுமையாக தாக்க தொடங்கியது.

புயல் காற்றுடன் தொடர்ந்து 15 மணி நேரங்கள் பலத்த மழை பெய்ய ஆரம்பித்ததால், மாகாணம் முழுவதும் பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தியது.



Cangnan நகரில் உள்ள ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததில், சுமார் 41 பேர் பலியாகினர். சீன அரசாங்கத்திற்கு சொந்தமான Xinhua என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், கடும்புயலில் சிக்கி இதுவரை சுமார் 104 பேர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.



புயலில் சிக்கிய சுமார் 190 நபர்கள் காணாமல் போயுள்ளதால், அவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.


மேலும், மாகாணம் முழுவதும் புயல் ஏற்படுத்திய பாதிப்பில் சுமார் 54 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடற்கரை அருகில் குடியுள்ள சுமார் 1.6 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு Saomai புயல் மிக பயங்கரமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவில் இயற்கை சீற்றங்களினால் இந்தாண்டு மட்டும் சுமார் 1699 பேர் பலியாகியுள்ளதாகவும், 415 பேரை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என சீனாவின் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

C1 C2 C3 C4