எகிப்தில் திருமண நிச்சயதார்த்த படகு கப்பலுடன் மோதியதில் 21 பேர் பலி!!

298

எகிப்­திய கெய்ரோ நகரின் வடக்கே நைல் நதியில் பட­கொன்றில் புதன்­கி­ழமை இரவு இடம்­பெற்ற திரு­மண நிச்­ச­ய­தார்த்த வைப­வத்தின் போது, அந்தப் படகு சரக்குக் கப்­ப­லொன்­றுடன் மோதி­யதில் அதில் பயணம் செய்த குறைந்­தது 21 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு பாது­காப்பு வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

மேற்­படி படகில் பய­ணித்த 5 பேர் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்­ளனர். அதே­ச­மயம் குறைந்­தது 6 பேர் காணாமல் போயுள்­ளனர்.

இந்­நி­லையில் காணா­மல் ­போ­ன­வர்­களை மீட்கும் பணி இருள் கார­ண­மாக தாம­த­ம­டைந்­த­தாக பாது­காப்பு வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.பலி­யா­ன­வர்­களில் குறைந்­தது இரு சிறு­வர்கள் உள்ளடங்­கு­கின்றனர்.

இளம் ஜோடி­யொன்றின் திரு­மண நிச்­ச­ய­தார்த்­தத்தைக் கொண்­டாட அந்த ஜோடியின் குடும்பத்தினரும் நண்­பர்­களும் குறிப்­பிட்ட படகை வாட­கைக்கு அமர்த்­தி­யுள்­ளனர்.

இந்த சம்­ப­வத்தில் திரு­மண நிச்­ச­ய­தார்த்தம் செய்து கொண்ட ஜோடிக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் சரக்குக் கப்பலின் கப்டனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

W1 W2