மீண்டும் சிறப்பாக ஆடி வந்து விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த இயான் பெல்!

334

Ian-Bell-England-Ashes-014

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் 405 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

இதனால் இங்கிலாந்து அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. மேலும், நடுகள வீரர்களான பேலன்ஸ், இயான் பெல் ஆட்டம் குறித்து கடும் விமர்சன் எழும்பியது. இதன்விளைவாக பேலன்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனால், அனுபவ வீரரான இயான் பெல்லுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

கார்டிப்பில் நடைபெற்ற முதல் போட்டியில் பெல் முதல் இன்னிங்சில் 1 ஓட்டங்களிலும் , 2-வது இன்னிங்சில் 60 ஓட்டங்களும் எடுத்தார். ஆனால், பேட்டிங்குக்கு ஒத்துழைத்த லார்ட்ஸ் மைதானத்தில் முதல் போட்டியில் 1 ஓட்டத்திலும் , 2-வது இன்னிங்சில் 11 ஓட்டங்களும் எடுத்தார். இங்கிலாந்து அணியின் தோல்விக்கு இதுவும் முக்கியமானதாக கருதப்பட்டது.

இதனால் 3-வது போட்டியில் சாதித்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு பெல் தள்ளப்பட்டார். பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு அளித்த ஆடுகளத்தில் இயான் பெல் முதல் இன்னிங்சில் 53 ஓட்டங்கள் எடுத்து அணியில் ஸ்கோர் 250-ஐ தாண்ட முக்கிய காரணமாக இருந்தார். பின்னர், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இதனால் 4-வது டெஸ்ட் போட்டியில் தொடருவாரா என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் இயான் பெல்.

33 வயதாகும் பெல் இங்கிலாந்து அணிக்காக 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22 சதங்கள், 45 அரை சதத்துடன் 7545 ஓட்டங்கள் குவித்துள்ளார்.