விக்டோரியன் ஓபன் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் ஜோஸ்னா

341

d77d4a83-b65e-481b-a5c6-45aab949ae20_S_secvpfவிக்டோரியன் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜோஸ்னா, 8-ம் நிலையில் உள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்டின் நன்-ஐ எதிர்கொண்டார். இதில் ஜோஸ்னா 11-7, 11-5, 11-9 என நேர்செட்டில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

முதல் இரண்டு செட்களில் ஜோஸ்னாவிடம் சரணடைந்த நன், மூன்றாவது செட்டில் மட்டும் சற்று நெருக்கடி கொடுத்தார்.

இறுதிப்போட்டியில் 2-ம் நிலையில் உள்ள டென்மார்க்கின் லினே ஹன்செனை ஜோஸ்னா சந்திக்கிறார்.

ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் மகேஷ் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் 11-6, 11-6, 11-6 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்தார்.