வவுனியாவில் பண்டாரவன்னியனின் 212 ஆவது ஞாபகார்த்த விழா!!(படங்கள்)

503


அன்னிய படையெடுப்பக்கு எதிராக 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வீரத்துடன் போராடிய தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 212ஆவது நினைவு தினம் நேற்று(25.08) வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் அமைந்திருக்கும் அன்னாரின் திருவுருவச்சிலைக்கு முன்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வை பண்டாரவன்னியன் நற்பணிமன்றம் மற்றும் வவுனியா நகரசபை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.



இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிதாக தெரிவாகியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ், திருமதி சாந்தி, சிவமோகன், வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மு.சிற்றம்பலம், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் கண்ணன், வவுனியா நகரசபைச் செயலாளர் க.சத்தியசீலன்,

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து வணக்கம் வெலுத்தினார்கள்.



அதனைத் தொடர்ந்து வவுனியா நகரசபை மண்டபத்தில் ஞாபகார்த்த நினைவுப் பேரூரை பண்டார வன்னியனார் நினைவு விழா இடம்பெற்றது.



பண்டார வன்னியனின் ஞாபகார்த்த நினைவுச் சின்னம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை ஆற்றிய நினைவுப் பேரூரையும் இடம்பெற்றது.

P1010540 P1010548 P1010550 P1010552 OLYMPUS DIGITAL CAMERA P1010584 P1010590 P1010594 P1010599