வவுனியா பாவற்குளம் விவசாயிகள் குளத்தண்ணீரை திறந்துவிடக்கோரி அரச அதிபரிடம் மகஜர்!!

615

Kulam

வவுனியா பாவற்குளம் 8ஆம் யுனிட் உளுக்குளம் பகுதி விவசாயிகள் தமது வயலுக்கு குளத்தண்ணீரை திறந்து விடுமாறு கோரி நேற்று (28.08) வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா பாவற்குளம் 8ஆம் யுனிட் உளுக்குளம் பகுதியில் வயல் செய்யும் 22 விவசாயிகள் 100 ஏக்கர் வயலுக்கு தேவையான குளத்தண்ணீரை திறந்துவிடுமாறு திட்ட முகாமைத்துவக் குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

எனினும் குளத்தண்ணீர் திறந்துவிடும் காலம் கடந்த 20ஆம் திகதியுடன் நிறைவுபெற்றுவிட்டதாக திட்டமுகாமைத்துவக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனால் சிறுபோகம் மேற்கொள்ளும் சில விவசாயிகளின் விளைச்சல்களை பாதிக்க வாய்ப்புள்ளதையும், தண்ணீரை திறப்பதில் நடைமுறைச் சிக்கல் உள்ளதை அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

நேற்று காலை திணைக்களத்தில் குளத்தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு திட்ட முகாமைத்துவக் குழு அழைப்பு விடுத்துள்ளது. எனினும் இக் கலந்துரையாடலில் தமக்கு தீர்வு கிடைக்கவாய்ப்பு இல்லை என்று கூறி தமது பிரச்சனைகளை முன்வைத்து அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை மக்கள் கையளித்துள்ளனர்.

அரச அதிபர் நடவடிக்கையினை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளதாகவும் இரண்டு தினங்களில் குளத்தண்ணீரை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்துள்ளதாகவும் அரசாங்க அதிபரை சந்தித்த பின்னர் கமக்காரர்கள் தெரிவித்தனர்.

-பிராந்திய செய்தியாளர்-

P1010657 P1010658